பொதுவாக, கருவிலிருக்கும் குழந்தைகள் மேல் அம்மாக்கள் செலுத்தும் தாக்கம் குறித்து இங்கு நிறைய ஆய்வுகளும் விளக்கங்களும் இருக்கின்றன. உளவியல் ரீதியான, உடல் ரீதியான, மரபுக் கூறுகள் ரீதியான வளர்ச்சிக்கு அல்லது குறைபாட்டிற்கு அம்மக்களின் வாழ்வியல், மற்றும் அவரின் பழக்கவழக்கங்கள் எந்தளவிற்கு காரணமாக அமைகின்றன என்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வமும் பொதுமக்களிடம் அதிகம் காணக்கிடைக்கிறது. ஆனால், அப்பாக்கள் செலுத்தும் தாக்கம் குறித்து நாம் தெரிந்துகொள்வதும் மிகவும் அவசியம். ஆகவே, புது அப்பாக்களின் கவனத்தை இந்த ஆய்வு முடிவுகள் கேட்கின்றன.


அப்பாக்களின் வயது, மது அருந்தும் பழக்கம், மற்றும் பிற வாழ்வியல் பழக்கங்கள் அவர்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஊட்டச்சத்து ரீதியில்,  ஹார்மோன்கள், உளவியல் ரீதியில் அம்மா உருவாக்கும் சூழல் குழந்தைகளின் உறுப்புகள் உருவாகும் விதத்தை, கூறுகளின் கட்டமைப்பை நிர்ணையிக்கிறது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று. ஆண்களின் விந்தணுவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கருவின் வளர்ச்சியை எவ்வளவு தூரம் நிர்ணையிக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.



தாய்க்கு மது அருந்தும் பழக்கம் இல்லையென்றாலும் கூட தந்தைக்குத் தீவிரமாக மது அருந்தும் பழக்கம் இருப்பின் அது குழந்தைக்கு ஏற்படும் குறைபாட்டில் (foetal alcohol spectrum disorder) போய் முடியும். மேலும், தந்தையின் குடிப் பழக்கம் பிறக்கும்போது குழந்தைகள் சரியான எடையில் இல்லாமல் இருப்பது, மூளையின் சில பண்புகளில் சிக்கல் இருப்பது போன்றவற்றையும் உருவாக்கும். தந்தையின் அதிகப்படியான வயது உளவியல் சிக்கல்கள், ஆட்டிசம் போன்றவற்றையும் குழந்தைகளிடம் உருவாக்கும். தந்தையின் உணவுப் பழக்கவழக்கங்கள் குழந்தைகளுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை நிர்ணயிக்கிறது. மேலும் தந்தை அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டவராக இருப்பின் குழந்தைகளுக்கு நீரிழிவு பிரச்சனை வருவதற்கான வாய்ப்பை அது அதிகரிக்கிறது.


மேலும் படிக்க..   


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்