தற்போது ‘ஊம் சொல்றீயா’ என்ற பாடல் தான் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது. அந்த பாட்டில் வரும் சமந்தா மீம் டெம்ப்ளேட் இருக்கிறார். அந்த பாட்டை கொண்டு பல மீம் கிரியேட்டர்ஸ்கள் பல மீம்ஸ், வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், ‘தில்லானா மோகனம்பாள்’ படத்தில் வரு ’நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும்’ பாடலில், ‘ஊம் சொல்றீயா’ பாடலை ஓடவிட்டு, மீம் கிரியேட்டர்கள் சேட்டை செய்துள்ளனர். வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து, சிலர் அநியாயம் பண்றீங்களேடா என்று கூறி வருகின்றனர். பழைய பாடல்களின் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். வாட்சப் ஸ்டேடஸ் முதல் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் வரை களை கட்டுகிறது


 



நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி தியேட்டர்களில்  வெளியான திரைப்படம் ‘ புஷ்பா - பாகம் 1’. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப்படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.


தெலுங்கில் ‘ ஓ ஓ அண்டவா’ என்ற பேரில் வெளியாகியிருக்கும் இந்த பாடலை சந்திரபோஸ் எழுத, இந்தப் பாடலை இந்திரவதி பாடியிருக்கிறார். தமிழில் விவேகா இந்த பாடல் வரிகளை எழுத நடிகை ஆண்ட்ரியா இந்தப் பாடலை பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகியிருக்கும் இந்தப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான நாளிலிருந்தே இந்தப் பாடல் சர்ச்சைகளில் சிக்கியது.


ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் அமைப்பு ஒன்று இந்தப் பாடல் ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ஆண்கள் செக்ஸை மட்டும் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது போல பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் பாடலை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


திரையில் இந்தப் பாடலை கொண்டாடும் ரசிகர்கள்






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண