மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால் அது தேநீர்தான். இயல்பாக ஒருநாளை பலர் தேநீருடன் தான் தொடங்குவார்கள். அதிலும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அதிகம் மிஸ் செய்வது அலுவலகத்தின் தேநீர் இடைவேளையைத்தான். அது அந்த அளவுக்கு அவர்களின் அலுவலக வாழ்வியலில் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்த பொருளாக இருந்தது. அலுவலகம் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் ஒரே மருந்து தேநீர்தான். 




இந்தியாவில் ஒவ்வொரு இடமும் தேநீரை ஒவ்வொரு விதத்தில் ரசித்துக் குடிக்கின்றனர். பால் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என டீயின் வகைகள்  நீண்டுகொண்டே போகும். அனைத்துமே நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுத்தாலும் எலுமிச்சை தேநீரில் புத்துணர்ச்சி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிடைக்கும். அதற்கு காரணம் எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து. சரி, எலுமிச்சை தேநீர் குடிப்பதால்  நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம்.


1.நோய் எதிர்ப்பு சக்தி:


கொரோனா காலக்கட்டத்தில் நாம் அதிகம் பேசுவது நோய் எதிர்ப்பு சக்தி குறித்துதான். எலுமிச்சையில் விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன. அதேபோல தேயிலை தூளும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக உள்ளது. அப்படியானால் எலுமிச்சை தேநீர் எவ்வளவு நல்லது பாருங்கள்.


2.தோல் ஆரோக்கியம்


எலுமிச்சையில் உள்ள நமது தோல் ஆரோக்கியத்துக்கு பெரும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. தோல் ஆரோக்கியம் உள்ளதால் உங்கள் டயட் நேரங்களில் மிக முக்கியமானது எலுமிச்சை.எலுமிச்சை டீ முகப்பரு மற்றும் தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.





3. உடல் எடையை சீராக்கும்


உடல் எடையை சில கிலோ வரை நீங்கள் குறைக்க விரும்பினால் எலுமிச்சை டீ சிறந்த பானம்.உடல் செறிமானத்தையும், கட்டுக்கோப்பான உடலமைப்பையும் லெமன் டீ தூண்டுகிறது. உடல் எடையை குறைக்க பல்வேறு  முயற்சி எடுப்பவர்கள் கண்டிப்பாக லெமன் டீ உதவியையும் நாடுங்கள்




ஊரடங்கு காலத்தில் காதலர்கள் சந்திக்கும் 5 பிரச்னைகள் என்னென்ன?




4.மன அழுத்தத்தை குறைக்கும்


எலுமிச்சை டீயில் பொட்டாசியம், மெக்னீசியம், சிங்க், காப்பர் போன்ற பல சத்துகள் கலந்து கிடைப்பதால் நமது மூளையை சுறுசுறுப்பாக்கிறது.  இந்த காரணத்தால் தான் சூடான ஒரு லெமன் டீயைக்  குடித்தால் நம் மனநிலையே புத்துணர்ச்சியாக மாறுவதும், மன அழுத்தம் நீங்கி ஒரு வித அமைதியை  உணர்கிறோம்.


5.அமிலத்தன்மையை எதிர்க்கிறது


மிகவும் பொதுவான செரிமான நோய்களில் ஒன்று அமிலத்தன்மை. அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதை எலுமிச்சை பெரும்பங்கு ஆற்றுகிறது. எலுமிச்சை குடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லதும் கூட. 




Corona Healthy Diet: கொரோனா காலத்தில் பின்பற்ற 10 ஐடியாக்கள்!