Corona Healthy Diet: கொரோனா காலத்தில் பின்பற்ற 10 ஐடியாக்கள்!

வெறும் உணவும், சத்து மாத்திரைகளும், மூலிகைகள் மட்டுமே கொரோனா தொற்றை தடுக்காது. நல்ல ஆரோக்கியமான உணவே நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

Continues below advertisement

தமிழகத்தில் லட்சக்கணக்கான நோயாளிகள் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா நோய்  நோயாளிகளின் உடல் மற்றும் மனநலத்தில் கடுமையான தாக்கத்தை எற்படுத்துகிறது. மாநில அரசும், மத்திய அரசும் குணமடைந்து வரும் நோயாளிகளுக்கு எண்ணற்ற அறிவுரைகளை வழங்கி வருகிறது.      

Continues below advertisement

மன அழுத்தத்தில் இருந்து விடுபட கீழ்காணும் வழிகளைப் பின்பற்றலாம்.  

சமூகச் செய்திகளை தொடந்து பார்ப்பதிலிருந்து சற்று இடைவெளி எடுத்துக்கொள்ளலாம் அல்லது செய்திகள் பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம்.

நோயாளிகள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் அலைபேசி வழியாகவோ அல்லது வீடியோகால் (காணொளி) மூலமாக பார்த்து பேசி தொடர்பில் இருக்காம்.

 

நோயாளிகள் தங்களுக்கு பிடித்த மமைகிழ்ச்சியை அளிக்கக்கூடிய பொழுதுபோக்குகளை திரும்பவும் செய்யலாம்.

தேவையான அளவு ஓய்வு எடுக்கலாம்.

ஆரோக்கியான உணவுகளை உண்ணலாம்

நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து, மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம் 

நோயாளி தனது நோயின் தன்மையை மறைக்கக்கூடாது.

கொரோனா நோய்த்தொற்று பற்றி அறிவியல் பூர்வமாகவும்,  சமீபத்திய அதிகாரப்பூர்வ சுகாதார ஆலோசனைகளை பெற வேண்டும்.

கொரோனா  நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து சென்றவர்களின் நேர்மறையான கதைகளை கூற வேண்டும். 

 

ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து உண்ண வேண்டும்:   

நோய் தொற்றிற்கு முன்பும், நோய்த் தொற்றின் போதும், அதன் பின்னரும் நல்ல சத்தானஉணவு மிகவும் அவசியமாகும். 

வெறும் உணவுகளோ, அல்லது உணவுக்குப் பதிலான சத்து மாத்திரைகளோ, மூலிகைகளோ கொரோனா தொற்று வருவதை முற்றிலுமாக தடுக்க முடியாது. ஆனால், நல்ல ஆரோக்கியமான உணவு நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்         

கோதுமை, அரிசி, சோளம் போன்ற தானியங்கள், கொழுப்பு, எண்ணெய் இனிப்பு வகை உணவுகளில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இது, நமது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். 

பயிறு வகைகள் (பருப்பு, அவரை, மொச்சை, பட்டாணி), விளங்குகளில் இருந்து கிடைக்கக்கூடிய புரத வகைகள் (மீன், கோழி, முட்டை) , பால் மற்றும் பால் சார்ந்த உணவு வகைகளில் புரதச் சத்து அதிகம் கிடைக்கிறது. நோய்த் தொற்றின் போது நோய் எதிர்ப்பு செல்களை அதிகரிக்கச் செய்வதற்காகவும், சில வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காகவும் நமது உடலுக்குச் சற்று அதிக புரதச் சத்துக்கள் தேவைப்படுகிறது.             

பருவகால பழங்கள், காய்கறிகள்( கீரை வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமுடைய பழங்கள், எலுமிச்சை பழ வகைகள்) வைட்டமின் A,  வைட்டமின் E, வைட்டமின் C, துத்தநாகம், இரும்பு, செலினியம் போன்ற தாதுக்கள் நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

மூச்சுப் பயிற்சி பலனளிக்கும்:   

மிதமான அறிகுறியுள்ள கொரோனா நோயாளிகளுக்கு, மூச்சுப் பயிற்சி சிறந்த பலன் அளிக்கும். நோயாளிகள் மூச்சுப் பயிற்சி செய்தால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது குறைகிறது.  மூச்சை இழுத்து பிடித்து வைத்திருக்கும் நேரம் குறைந்தால், அது ஆரம்ப எச்சரிக்கை அறிகுறி. அந்த நோயாளி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். நோயாளியால், மூச்சை இழுத்து பிடித்திருக்கும் நேரத்தை படிப்படியாக அதிகரிக்க முடிந்தால், அது நேர்மறையான அறிகுறி.

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், வீடு திரும்பிய நோயாளிகள் ஆகியோரும் மருத்துவரிடம் ஆலோசித்து இந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இது ஆக்ஸிஜன் தேவையை குறைக்கும். 

இவற்றை முயற்சி செய்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிதேடுங்கள்!

Continues below advertisement
Sponsored Links by Taboola