TNPSC Bursar Recruitment : இன்னும் இரண்டு நாட்கள்தான்; அரசு பணிக்கு விண்ணப்பிக்க மறந்துடாதீங்க மக்களே!

TNPSC Bursar Recruitment :தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 10 ஆம் தேதி கடைசி நாள்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10- ஆம் தேதி கடைசி நாள். மறந்துடாம விண்ணப்பித்துவிடுங்கள். வாய்ப்பை தவற விடாதீங்க மக்களே!

Continues below advertisement

பணி விவரம்:

நிதியாளர்

நிதியாளர் பணிக்கான கல்வித் தகுதி:

பொது நிர்வாகத்தில் முதுகலை (M.A.Public Administration) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பான https://www.tnpsc.gov.in/Document/tamil/32_2022_%20BURSAR%20TAM_1.pdf என்ற லிங்கில் தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேரடி ஆட்சேர்ப்பு படி கணினி வழி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படும்.

தேர்வு கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டு காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நிரந்தர பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு கட்டணம் – ரூ .150

தேர்வு கட்டணம்– ரூ.200

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர்  https://apply.tnpscexams.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்,

அறிவிப்பின் முழு விவரம்- https://www.tnpsc.gov.in/Document/tamil/32_2022_%20BURSAR%20TAM_1.pdf

முக்கிய நாட்கள்:




விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.12.2022


 

Continues below advertisement
Sponsored Links by Taboola