Job Alert : அரசு மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா..? 14-ந் தேதி இன்டர்வியூக்கு ரெடி ஆகுங்க..!

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Continues below advertisement

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாநாகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையிலானது. திருப்பூர் மாவட்ட சுகாதார நலச் சங்கம்  (District Health Society) வரும் 14-ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை)  நேர்காணல் (Walk- In -Interview)  நடைபெற உள்ளது. எனவே, தகுதியான நபர்கள் இந்நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பறுமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பணியின் பெயர், காலியிடங்கள், அடிப்படை தகுதிகள், பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதனை கீழே காணலாம்.

நிபந்தனைகள்:

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertakings) அளிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும்  இடம்:

அறை எண். 240-DME ;  120- DPH/DMS

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

பல்லடம் ரோடு,

திருப்பூர் - 641 604 14

நேர்காணல் நடைறும் நாள்:14.10.2022  காலை பத்து மணி முதல்.

தொலைபேசி எண். 0421-2478500

விண்ணப்ப படிவங்களை https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/10/2022100136.pdf என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.  விண்ணப்பப் படிவத்துடன், இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வாசிக்க..

TANCET 2023: எம்.இ, எம்பிஏ படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரியில்.. எந்தெந்த தேதிகள்? முழு விவரம்..

GATE 2023 Exam: பொறியியல் GATE தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு : விண்ணப்பிப்பது எப்படி?

Bank of Baroda Recruitment: பேங்க் ஆஃப் பரோடாவில் குவிந்திருக்கும் பணிவாய்ப்புகள்.. பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணிடுங்க..

Continues below advertisement