தமிழ்நாட்டிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் எம்.இ.எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் வரும் கல்வியாண்டிற்கான டான்செட் தேர்வுகள் வரும் பிப்ரவரி 25,26ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் வரும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை படிப்பிற்கு டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்தவகையில் வரும் 2023ஆம் ஆண்டி நடைபெறும் டான்செட் தேர்விற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Continues below advertisement

பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம்.சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும். அதேநாள் மதியம் எம்டெக், எம்.இ, எம்.ஆர்க், எம்பிளான் படிப்புகளுகான நுழைவு தேர்வு நடைபெறுகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி எம்பிஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. 

இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இந்த டான்செட் தேர்வுகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளாஅம். இந்தத் தேர்வு தொடர்பாக இருக்கும் சந்தேகங்கள் குறித்து 044-22358289/22358314 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு ஒன்று நடைபெறும். அந்த கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். முதலில் பிப்ரவரி மாதம் நுழைவுத் தேர்வு நடைபெறும். அதன்பின்னர் தேர்வு முடிவுகள் வந்த பின்னர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்று கருதப்படுகிறது.

பொறியியல் GATE தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு : விண்ணப்பிப்பது எப்படி?

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதன்படி தேர்வர்கள் அக்டோபர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் ஆக இருந்தது. இந்நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பிப்பதற்கான தேதி தாமதக் கட்டணத்துடன், அக்டோபர் 7ஆம் தேதி வரை உள்ளது.  ஜனவரி 3ஆம் தேதி முதல் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.