நாட்டின் பொதுத் துறை நிறுவனமான பாங்க் ஆஃப் பரோடா நிறுவனம் (Bank of Baroda) வங்கியில் Senior Relationship Manager, e-Wealth Relationship Manager, Group Sales Head (Virtural RM Sales Head) உள்ளிட்ட நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 346

பணி விவரம்:

Senior Relationship Manager

e-Wealth Relationship Manager

Group Sales Head (Virtural RM Sales Head)

கல்வித் தகுதி:

 Sr. Relationship Manager :

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை துறை இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு / டிப்ளமோ  படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடில் செயல்படும் அரசு / தனியார்/ சர்வதேச வங்கிகளில் மக்கள் தொடர்பு மேலாளராக இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 24-வயதுக்கு குறைவாகவோ , 40- வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

 e- Wealth Relationship Manager:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை துறை இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு / டிப்ளமோ  படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாட்டில் செயல்படும் அரசு / தனியார்/ சர்வதேச வங்கிகளில் மக்கள் தொடர்பு மேலாளராக இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 23-வயதுக்கு குறைவாகவோ , 35- வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Group Sales Head (Virtual RM Sales Head):

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை துறை இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு / டிப்ளமோ  படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

நிதி துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 31-வயதுக்கு குறைவாகவோ , 45- வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Operations Head-Wealth :

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் நல்லது.

நிதி துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 35-வயதுக்கு குறைவாகவோ , 50- வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு விவரம்:

பணியிட விவரம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், பணியமர்த்தப்படும் நகரங்களின் விவரங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

கல்வி மற்றும் பணி அனுபவ தகுகளின்படி,  விண்ணப்பதாரர்கள் நேர்காணுலுக்கு அழைக்கப்படுவார்கள். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செயல் திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

Intimation Changers - ரூ.100 மற்றும் பொதுப் பிரிவினர் மற்றும் OBC 2வகுப்பினருக்கு ரூ.600 ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்த தொகை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கான மாத ஊதியம், கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.10.2022

https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற லிங்க் மூலம் விண்ணபிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரம் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/wms-detailed-advertisement-30-09-2022-29-12.pdf லிங்கை கிளிக் செய்யவும்.