மத்திய இரயில்வேயின் கிழக்கு வாரியத்தில் (Eastern Railway Unit) உள்ள Apprentices பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரயில்வே பிரிவின் பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை- 3115
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பில் 50 சத்வீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் (Trade) படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General) தொடர்புடைய சான்றிதழ் பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 29/10/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். இதற்கு எழுத்து அல்லது குழு உரையாடல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29.10.2022
விண்ணப்பிக்கும் முறை:
www.rrcer.com என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின /பழங்குடியின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகியோர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஊதிய விவரம்:
தொழில் பழகுநர் சட்டத்தின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு https://rrcer.com/
அறிவிப்பின் முழு விவரம்: https://rrcrecruit.co.in/eraprt2223rrc/Notification_RRC_ER_2223.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Job Openings: NCS portal -இல் 4.82 லட்சம் வேலைகள் விண்ணப்பிப்பது எப்படி?
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது - மத்திய கப்பல்துறை அமைச்சர் தகவல்