தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager) 


கல்வித் தகுதி:



  • இந்தப் பணிக்கு Hospital Administration / Health Manahement / Public Health ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரி ஆகியவற்றில் முழு நேர படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகாலம் பணி அனுபவம் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஹெல்த் கேர் துறையில் பணி அனுபவம் இருப்பதும் வரவேற்கத்தக்கது.

  • அரசின் கொள்கைகள் மற்றும் அவற்றின் நடைமுறைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். 

  • NABH குறித்த அடிப்படை அறிவு மற்றும் புரிதல் இருக்க வேண்டும். 

  • தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

  • மொழித்திறன் இருப்பது அவசியம். 

  • கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

  • MS Word, Excel பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 


பணி காலம்: 


இந்தப் பணி 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலானது. பணித்திறன் மற்றும் தேவையின் அடிப்படையில் பணியின் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்:


இதற்கு தொகுப்பூதியம் அடிப்படையில் மாதம் ரூ.60,000 ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களுடன், அனுபவச் சான்று உள்ளிட்டவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 


முதல்வர்,
அரசு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
தூத்துக்குடி.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 31/03/2023


பணியிட எண்ணிக்கை உள்ளிட்ட வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/03/2023031739.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 




மேலும் வாசிக்க...


TN Budget 2023: மக்களே உங்களுக்காக... தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு இதுதான்!


பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 அறிவிப்பு - இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு