தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் இர.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக தருமபுரியில் முத்தரசன் பேட்டியளித்தாவது:

 


தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் டாக்டர் அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.  முக்கியமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்றும், செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இன்றைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்க கூடியது.

 

நாளை வேளாண்மைக்கு தனி பட்ஜட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுவும் வரவேற்க கூடிய வகையில் தான் இருக்கும். இந்த பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியம் திட்டம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அறிவிப்பு வரவில்லை. மேலும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அந்த பணியாளர்கள் குறித்த அறிவிப்பு வராதது, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் விவாதத்தின் போது, இதுகுறித்து தெரிவிக்க நிதியமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பேசி வந்தனர். ஆனால் கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் கணக்கில் ரூ.15 இலட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்ற அண்ணாமலை பரிந்துரை செய்ய வேண்டும். இந்திய நாட்டின் பிரதமர் மோடி, அதானிக்கு ஏஜெண்ட்டாக செயல்பட்டு வருகிறார். மிகவும் கேவலமாக இருக்கிறது. 

 

பாஜக தேர்தல் காலத்தில் சொன்ன ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞருக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகனை மறைத்து திசை திருப்பவே, வெளிநாட்டில் பேசும்போது, இந்தியாவை ராகுல்காந்தி அவதிக்குள்ளாக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசி கொண்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

 

 

அதிமுகவில் தற்போது நான்கு பிரிவுகள் ஏற்பட்டுள்ளது. இது அவர்களால் ஏற்படுத்தி கொண்டதில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பு, எடப்பாடி கை ஓங்கியது. தற்போது ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இப்படி மாறி மாறி நடைபெறுகிறது. அண்ணாமலை என் மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பலமானவர் என்று சொன்னார். இதற்கு அதிமுக கடுமையான எதிர்வினையாக ஆற்றினார்கள். ஆனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக, யாரும் பேசக் கூடாது என எடப்பாடி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு டெல்லியிருந்து வந்துள்ளது. குரங்கு இங்குள்ளது. குரங்காட்டி வேறெங்கோ உள்ளார். இதுதான் அதிமுக நிலைமை என்று கூறினார்.