தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்த தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பட்ஜெட்டின் உரையில் பேசும்போது, “கடந்தாண்டு வரவு-செலவு திட்டத்தில் நிதி மற்றும் நிர்வாக நலனை கருத்தில்கொண்டு, பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்தோடு, சமூக நலனையும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் இலக்குகளாக கொண்டு பல நலத்திட்டங்களும் வகுக்க்கப்பட்டன. இத்திட்டங்களின் அடிப்படையில் இந்தாண்டு நாங்கள் எய்த விரும்பிய இலக்குகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.


எதிர்நோக்கியுள்ள சவால்கள்


சமூகநீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய நான்கு அடிப்படை தத்துவங்களை கொண்டு நம் நாட்டிற்கே ஒரு கலங்கரை விளக்கமாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது. வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலகப்பொருளாதார நிதிச் சந்தைகளிலும் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களையும் வரும் நிதியாண்டில் நாம் எதிர்நோக்கியுள்ளோம்’’ என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்படுள்ளதாவது:


வரவு - செலவுத்‌ திட்டத்தின்‌ பொருண்மைகள்‌


பெண்கள் முன்னேற்றம்
திறன் மேம்பாடு மற்றும்‌ வேலை வாய்ப்பளித்தல்‌
விளிம்பு நிலையில் உள்ளோரின்‌ சமூக- பொருளாதார முன்னேற்றம்‌
அனைத்து தளங்களிலும்‌ சமூக நீதியை உருவாக்குதல்‌
சமச்சீர் வளர்ச்சியினை எய்துதல்‌


வரவு- செலவுத்‌ திட்டத்தின்‌ மொத்த மதிப்பு**


மொத்த செலவினங்கள்‌ ₹ 3,65,321 கோடி
மொத்த வரவினங்கள்‌ ₹ 2,73,246 கோடி 


**பொதுக்‌ கடன்‌ நீங்கலாக


மாநிலத்தின்‌ வருவாயினங்கள்‌


2023-24 ஆம்‌ ஆண்டுக்கான வருவாய்‌ வரவினங்கள்‌ 2,70,515 கோடி ரூபாயாக அரசு மதிப்பீடு செய்துள்ளது. இது 2022-23 ஆம்‌ ஆண்டை விட (திருத்த மதிப்பீடுகள்‌)10.1 சதவீதம்‌ அதிகமாகும்‌. அரசின்‌ சொந்த வரிகள்‌ வாயிலாக பெறப்படும்‌ வருவாய்‌ 19.3 சதவீதம்‌ உயரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.




மாநிலத்தின்‌ செலவினங்கள்‌


2023-24 ஆம்‌ ஆண்டிற்கான அரசின்‌ மொத்த செலவினங்கள்‌ 3,65,321 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள்‌, ஆம்‌ ஆண்டை விட 13.7 சதவீதம்‌ அதிகமாகும்‌.


வருவாய்ச்‌ செலவினங்கள்‌ பெருமளவில்‌, ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்‌ திட்டங்களுக்காக செலவினங்கள்‌ மேற்கொள்ளப்படுகின்றன.


மூலதனச்‌ செலவினங்கள்‌
மூலதனப்‌ பணிகளுக்கு செலவிடூவதன்‌ மூலம்‌ பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகத்தை அரசு அளிக்கும்‌. 2023-24 ஆம்‌ ஆண்டிற்கான மூலதனச்‌ செலவு 44,366 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள்‌) ஆம்‌ ஆண்டை விட 15.7 சதவீதம்‌ அதிகமாகும்‌.


வரவு- செலவு கையேட்டை முழுமையாகக் காண:


 



இவ்வாறு  வரவு- செலவு கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.