வேலூர் மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (The Vellore District Coopreative Milk Producers Union Ltd.) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:


கால்நடை மருத்துவ ஆலோசர்( Veterinary Cousultant )


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க துறை சார்ந்த படிப்பான B.V.SC & A.H படித்திருக்க வேண்டும்.அதோடு கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்துக்க வேண்டும்.


இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.




பணி காலம்:


இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது.  


ஊதிய விவரம்:


இதற்கு மாதம் ரூ. 43,000 ஊதியமாக வழங்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


 விண்ணப்பதாரர்கள் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம். கல்வி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்ற வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் இடம்:


வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம்,


சத்துவாச்சாரி, வேலூர்-9.


தொலைபேசி எண். 9345161677 




மேலும் வாசிக்க..


IAF Agniveer Recruitment 2023: +2 தேர்ச்சி பெற்றவர்களா? இந்திய விமானப் படையில் வேலை; முழு விவரம்!


CRPF Constable Recruitment 2023: சி.ஆர்.பி.எஃப்.பில் 9,212 பணியிடங்கள்;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்?