அண்ணா பல்கைக்கழகத்தில் 'The National Hub for Healthcare Instrumentation Development (NHHID) துறையில் ‘சிறப்பு அதிகாரி’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
பணி விவரம்:
சிறப்பு அதிகாரி
கல்வித் தகுதிகள்
இதற்கு விண்னப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது எம்.பி.ஏ. படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முழு நேர அலல்து பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகவியல் மற்றும் நிதியியல் துறையில் இரண்டு ஆண்டு காலம் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.40,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை?
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிகக்ப்படும்.
கவனிக்க..
- விண்ணப்பிக்கும்போது, சுய விவர குறிப்பில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பற்றி குறிப்பிட வேண்டும்.
- இது தற்காலிக பணி வாய்ப்பு மட்டுமே; பணி நிரந்தரம் செய்யப்படாது.
- தேர்வு செய்யப்படுவர்கள், இரண்டு வாரங்களுக்கு பிறகு பணியில் சேர வேண்டும்.
- தேர்வு செய்யப்படுவதில் அண்ணா பல்கலைக்கழக விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு..
Special Officer,
NHHID,
Anna University,
Chennai - 600 025
இ-மெயில் - au.nhhid@gmail.com
தொடர்பு எண் - 044 - 22357953
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Centre for Climate Change and Disaster Management,
Anna University,
Chennai – 600025
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://annauniv.edu/pdf/NHHID%20Recruitment%20special%20officer.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Bigg Boss Pavni: அச்சச்சோ... பிக்பாஸ் பிரபலம் பாவ்னிக்கு அறுவை சிகிச்சை.. என்னதான் ஆச்சு?