மாவட்ட நீதிபதி பதவிக்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன? என்று காணலாம். 


பணி விவரம்:


மாவட்ட நீதிபதி (Entry Level)


மொத்த பணியிடங்கள் - 50 


Tamil Nadu Judicial Service பிரிவின் கீழ் 50 மாவட்ட நீதிபதி தேர்வு செய்யப்பட உள்ளனர். 


கல்வித் தகுதி:


இதற்கு 10+2 என்ற முறையில் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


2009 -2010 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வழக்கறிஞராக பணி அனுவம் இருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.51,550 கொடுக்கப்படும். (ரூ.51,550 - 1230 - ரூ.58,930 - ரூ.1380 - ரூ.63,070 + Allowance) பின்னர், ஊதிய உயர்வு அளிக்கப்படும். 


விண்ணப்ப கட்டணம்:




தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, வைவா வாய்ஸ் டெஸ்ட் ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு மையங்கள்: 
 
இதற்கு சென்னையில் உள்ள மையத்தில் தேர்வு நடைபெறும்.


முதல்நிலை தேர்வு பாடத்திட்டம்






முதன்மை தேர்வு பாடத்திட்டம் 




 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு விண்ணப்பிக்க  www.tn.gov.in  அல்லது https://www.mhc.tn.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2023


வங்கி மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 02.08.2023


முக்கிய தேதிகள்:


 






மேலும் வாசிக்க..


Chandrayaan 3 Launch: சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் தேதியில் மாற்றம்..இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ITR Refund Rules: வருமான வரியை ரீஃபண்ட் பெறுவது எப்படி..? விதிமுறைகள் என்னென்ன? முழு விவரம்...!