தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் (National Water Development Agency (NWDA)) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தன்னாட்சி நிறுவனம். மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் பொறியாளர், ட்ராஃப்ட்ஸ்மேன், ஸ்டெனோகிராஃப்ர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
பணி விவரம்:
- Junior Engineer (Civil)
- Junior Accounts Officer
- Draftsman Grade-III,
- Upper Division Clerk
- Stenographer Grade - II
- Lower Division Clerk
பணி இடம்:
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
மொத்த பணியிடங்கள் - 40
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- ஜூனியர் பொறியாளர் பணிக்கு சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- ஜுனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணிக்கு வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டய கணக்கர் பயின்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- ட்ராஃப்ஸ்மேன் பணியிடத்திற்கு Draftsman ship (Civil)-ல் ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- Upper Division Clerk பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.operating systems, MS Word, Office, Excel, Power Point உள்ளிட்டவைகளுடன் கணின் பயன்பாடு குறித்த அறிவு இருக்க வேண்டும்.
- ஸ்டெனோகிராபர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும்.
- Lower Division Clerk பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Junior Engineer (Civil) - Level - 6 (ரூ.35,400-1,12,400)
- Junior Accounts Officer - Level – 6 (ரூ.35,400-1,12,400)
- Draftsman Grade-III - Level – 4 (ரூ.25,500-81,100)
- Upper Division Clerk - Level - 4 (ரூ. 25,500- 81,100)
- Stenographer Grade - II - Level - 4 (ரூ. 25,500- 81,100)
- Lower Division Clerk - Level – 2 (ரூ.19,900-63,200)
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் ரூ.550 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஏனையோர் ரூ.890 கட்டணமாக செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://nwda.cbtexam.in/#about - என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.04.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://nwda.gov.in/upload/uploadfiles/files/How%20to%20Apply(2).pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..