மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (சி.எஸ்.ஐ.ஆர்.- Council of Scientific & Industrial Research) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..


அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளான எம்.எஸ்.சி படிக்கும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை (JRF ) மற்றும் விரிவுரையாளர் பதவிக்கான தகுதித் தேர்வான (Lectureship) CSIR NET தேர்வு மார்ச் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


சி.எஸ்.ஐ.ஆர்.தகுதித் தேர்வு அறிவிப்பு 


வேதியியல், புவியியல், சுற்றுச்சூழல், அறிவியல், இயற்பியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கான தகுதித் தேர்வினை சி.எஸ்.ஐ.ஆர். பிரிவுன் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர், 2022 மற்றும் ஜூன்,2023 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சி.எஸ்.ஐ.ஆர். தகுதித் தேர்வு எப்போது? 


ஜூன் மாதம் 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் தேர்வு நடைபெறுகிறது. 


தேர்வு கட்டணம்


ஆன்லைனில் முறையில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வும் ஆன்லைனில் நடைபெறும்.




முக்கிய தேதிகள்: 




விண்ணப்பிப்பது எப்படி?



  • https://ugcnet.nta.nic.in/- என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். 

  •  CSIR UGC NET Exam - என்ற பிரிவில் https://examinationservices.nic.in/ExamSys23/root/Home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgGDtWcAbgFDre9xlyz9+V+Qofj7bz/f2saq9vGuVnSs/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

  • அதில் கேட்கப்படும் தேவையான தகவல்களை பதிவிடவும். 

  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.  


விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2023 மாலை 5 மணி வரை 


விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி - 12.04.2023 முதல் 18.04.2023 வரை


அறிவிப்பின் முழு விவரம் அறிய - https://cdnbbsr.s3waas.gov.in/s3efdf562ce2fb0ad460fd8e9d33e57f57/uploads/2023/03/2023031172.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


என்.டி.ஏ. -ன் உதவி எண்கள் - 011-40759000 / 011-69227700


இ-மெயில் முகவரி - csirnet@nta.ac.in. 




மேலும் வாசிக்க..


TN Weather Update: 14 மாவட்ட மக்களே! குளு குளு தண்ணிய குடம் குடமா வச்சிக்கோங்க... 100 டிகிரி பாரன்ஹீட்டை கடக்கும் வெப்பநிலை..


Asia Hockey Cup: 16 ஆண்டுகளுக்கு பிறகு...! சென்னையில் மீண்டும் ஆசிய ஹாக்கி போட்டி - தேதியை அறிவித்த அமைச்சர் உதயநிதி