தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் சிவங்கங்கை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டில் அலுவலகத்தில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான காலிப் பணியிடங்களில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:



  • Audiologist/Speech Therapist

  • Data Entry Operator 

  • Radiographer

  • Multi Purpose Hospiral Worker


கல்வித் தகுதி:



  • Audiologist/Speech Therapist பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக வேண்டும். 

  • தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க கணினி அறிவியலில் பி.ஜி. டிப்ளமோ மற்றும் டைப் ரைட்டிங் லோயர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • ரேடியோகிராஃபர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • பல்நோக்கு உரிமையாளர் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • Audiologist/ Speech Therapist - ரூ.23,000/-

  • Data Entry Operator - ரூ.13,500/-

  • Radiographer- ரூ.13,300/-

  • Multi Purpose Hospiral Worker- ரூ.8,500/-


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கும் முறை:


https://sivaganga.nic.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்புப் பிரிவில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும், சிவகங்கை இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்னப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள இணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். 


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


இணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
நேரு பஜார், சிவகங்கை.
தொலைபேசி எண் - 04575 - 240403


பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2024/07/2024070171.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.




மேலும் வாசிக்க..


பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


Indian Bank Recruitment: இந்தியன் வங்கியில் அதிகாரி பணி: விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?