திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் தேர்வு வாரியம்  பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை பட்டதாரி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வி ஆண்டு இதில் எது முன்னரோ அதுவரையில் தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-ன் படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் -8 தமிழ், ஆங்கிலம், தாவரவியல், இயற்பியல் (முறையே ஒரு காலப்பணியிடம்) கணிதம் பொருளியல் முறையே 2 காலிப்பணியிடம்). பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் -17 (தமிழ்-1,ஆங்கிலம்- 4, கணிதம்-6, அறிவியல் -4 சமூக அறிவியல் -2). இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் 34.


முன்னுரிமை:


பழங்குடியினர் - பழங்குடியினர் இல்லாத பட்சத்தில் ஆதிதிராவிடர்களுக்கு, ஆதிதிராவிடர்கள் இல்லாத பட்சத்தில் இதர வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து மூலமான விண்ணப்பத்தினை நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலுள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மின்னஞ்சல் முகவரி:


potwtvm@gmail.com முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூபாய் 18 ஆயிரம் விண்ணப்பம் ஒப்படைக்க கடைசி நாள் 15.07.2024,  பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூபாய் 15ஆயிரம் விண்ணப்பம் ஒப்படைக்க கடைசி நாள் 08.07.2024 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூபாய் 12 ஆயிரம் விண்ணப்பம் ஒப்படைக்க கடைசி நாள் 08.07.2024 ஆகும். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.