மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
பணியிட விபரம்
இடைநிலை சுகாதார பணியாளர், கதிர்பட பதிவாளர், நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆயுர்வேத மருத்துவர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 26 நபர்களை பணி பணியமர்த்தப்பட உள்ளது.
நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்)
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
- பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertakling) அளிக்க வேண்டும்.
- காலிப்பணியிட விவரம் மாறுதலுக்கு உட்பட்டது.
- வகுப்புவாரி இடஒதுக்கீடு முறை (Communal Raster) பின்பற்றப்படும்.
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
ஆட்சியர் செய்தி குறிப்பு
இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், பல் மருத்துவர், மாவட்ட தர ஆலோசகர், கணக்கு உதவியாளர், பல் மருத்துவ உதவியாளர், மருந்து வழங்குநர், நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், இடைநிலை சுகாதார பணியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், கதிர்பட பதிவாளர், ஆயுர்வேத மருத்துவர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.
இணையதள மற்றும் அலுவலக முகவரிகள்
இப்பணியிடங்களுக்கான தகுதி, ஊதியம், மற்றும் விண்ணப்ப படிவம் https://mayiladuthurai.nic.in/notice-category/recruitment/ என்ற இணையத்தளத்தில் காணலாம். விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், நம்பர் 5, புதுதெரு, எஸ்.எஸ் மஹால் எதிர்புறம், மயிலாடுதுறை 609001, என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற வரும் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.