மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர்.
அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
அக்னி பாதை திட்டம் குறித்து விரிவாக அறிய: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/861_1_Terms_and_Conditions_for_Agnipath_Scheme.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.
IAF Agniveervayu Recruitment 2025
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான அக்னி வீரர் வாயு பணிகளுக்கான சேர்க்கை ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தேர்வர்கள் vayu.agnipath.cdac.in என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2005 முதல் ஜூலை 1, 2008 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.
திருமணமாகாத தேர்வர்கள் மட்டுமே அக்னிவீரர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோல 4 வருட வேலையில், கர்ப்பமாக மாட்டோம் என்று பெண் தேர்வர்கள் வாக்குறுதி கொடுக்க வேண்டும்.
கல்வித் தகுதி
- 12ஆம் வகுப்புத் தேர்வைக் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களோடு முடிக்க வேண்டும். அதேபோல ஆங்கிலத்திலும் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
- பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- அல்லது 2 ஆண்டு தொழிற்கல்வி படிப்பைப் படித்திருக்க வேண்டும்.
- அறிவியல் துறை மற்றும் அறிவியல் அல்லாத துறை தேர்வர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.airmenselection.cdac.in/CASB/