தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


அலுவலக உதவியாளர்


பணியிடம்


தொண்டாமுத்தூர் ஊராட்சி


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 32 வயதுக்கும் மிகாமலும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


https://coimbatore.nic.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்து செய்து தேவயான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
தொண்டாமுத்தூர்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://drive.google.com/file/d/1KeSQJl8ERlUJ9QXA7zvq01xqxNYKLgDE/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காண்லாம். 


இந்திய மருத்துவ ஆரய்ச்சி நிறுவனத்தின் கீழ்  சென்னையில் செயல்பட்டு வரும் National Institute of Epidemiology அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


தொழில்நுட்ப உதவியாளர் (குரூப் -பி, லெவல் -6)


ஆய்வக உதவியாளர் (குரூப் - சி, லெவல் -1)


கல்வித் தகுதி


தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு  Statistics/ Applied Statistics/ Biostatistics உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஆய்வக உதவியாளர் பணிக்கு 10-வது படித்திருக்க வேண்டும். 50% மதிப்பெண் படித்திருக்க வேண்டும்.


நெட்வோர்க்கிங், ப்ரோகிராமர், ஆராய்ச்சி நிர்வாகம், தொடர்பியல், சமூக அறிவியல், எலக்ட்ரிக்கல், ஏர்-கன்டிசன் உள்ளிட்ட துறைகளில் பணி செய்ய வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். ICMR ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு விவரம்:


ஆய்வக உதவியாளர் பணிக்கு 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


தெரிவு செய்யும் முறை


இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


எழுத்துத் தேர்வு மையம்


சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


https://nie.gov.in/ / https://main.icmr.nic.in / என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - இது தொடர்பான அறிவிப்பிற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும். 


வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரம், ஊதிய விவரம் உள்ளிட்டவற்றை பற்றி கூடுதல் விவரத்திற்கு https://nie.icmr.org.in/images/pdf/careers/Technical_Recruitment_2023_-_Detailed_Advertisement.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்..


முகவரி:


Department of Health Research,
Ministry of Health and Family Welfare, Government of India,
Ayapakkam, Chennai- 600 077




மேலும் வாசிக்க..


LEO Success Meet LIVE: இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் லியோ சக்சஸ் மீட்.. உடனுக்குடன் அப்டேட்கள் உங்களுக்காக!


Malavika Mohanan: வாவ்.. தங்கலான் டீசரில் மிரட்டிய மாளவிகா.. படத்தில் விக்ரமுக்கு டஃப் கொடுப்பாரா?