LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. குட்டிக்கதை சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்ட விஜய்..!
LEO Success Meet LIVE Updates: நடிகர் விஜய் நடித்த “லியோ” படத்தின் வெற்றி விழா நடைபெறும் நிலையில், அதுகுறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
ABP NADULast Updated: 01 Nov 2023 11:00 PM
Background
நடிகர் விஜய் நடித்துள்ள “லியோ” படத்தின் வெற்றி விழா (LEO Success Meet) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிலையில், அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.LEO Success Meet LIVE கடந்த அக்.19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப்...More
நடிகர் விஜய் நடித்துள்ள “லியோ” படத்தின் வெற்றி விழா (LEO Success Meet) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிலையில், அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.LEO Success Meet LIVE கடந்த அக்.19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 12 நாள்களைக் கடந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாம் முறை விஜய் இணைந்த நிலையில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஸ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், ஜனனி, மேத்யூ தாமஸ் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில், பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றன.இந்நிலையில், நேற்று காலை லியோ படம் 12 நாள்களில் வசூலித்த தொகை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி லியோ படம் இதுவரை ரூ.540 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதனிடையே பட வெளியீட்டுக்கு முன் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின் யாரும் எதிர்பார்த்திரா வகையில் ரத்தானது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்த விழா ரத்தான நிலையில், நடிகர் விஜய்யின் வழக்கமான குட்டி ஸ்டோரி, அவரது மாஸான வருகை என அனைத்தும் இல்லாமல் போனது விஜய் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.இந்நிலையில் தற்போது படம் வெளியாகி நல்ல வசூலைக் குவித்துள்ளதால் வெற்றி விழா(LEO Success Meet) நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்களில் கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.அதன்படி, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், வெற்றி விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். தொடர்ந்து, லியோ படத்தின் வெற்றிவிழாவுக்கு காவல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.இதனிடையே வெங்கட் பிரபுவுடன் விஜய் கைகோர்த்துள்ள தளபதி 68 படத்துக்காக மொத்த படக்குழுவும் பாங்காங் சென்றுள்ளதாகவும், இதனால் விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்பது சந்தேகம்தான் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வந்தன.இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 7 ஸ்க்ரீன் நிறுவனம் நேற்று மாலை பதிவிட்டது. அதன்படி, “தளபதியோட குட்டி ஸ்டோரி இல்லாம எப்டி நண்பா? லியோ சாரி, பார்த்திபனோட மொத்த குடும்பம், படக்குழு உங்களுக்காக வராங்க.. லியோவின் கர்ஜனை.. ப்ளடி ஸ்வீட் வெற்றி. இந்த வாட்டி மிஸ் ஆகாது” எனப் பதிவிட்டுள்ளது. லியோ தயாரிப்பு நிறுவனம் இந்தப் பதிவுடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள நிலையில் இணையத்தில் இந்தப் பதிவு லைக்ஸ் அள்ளி வருகிறது.
LEO Success Meet LIVE: நமக்கு பெரிய வேல இருக்கு நண்பா...ரசிகர்களுக்கு விஜய் மெசேஜ்....
இறுதியாக ரசிகர்களிடம் நடிகர் விஜய் வைத்துள்ள வேண்டுகோளுடன் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. “ சமீப காலங்களில் இணையதளத்தில் அதிகம் கோபத்தை வெளிப்படுத்துகிறீர்கள்...அது எல்லாம் நமக்கு வேண்டாம் நண்பா. நமக்கு பெரிய வேலைகள் இருக்கு....” . இதன் மூலம் பல போராட்டங்களுக்குப் பிறகு விஜய் ரசிகர்கள் இன்று நிம்மதியாக உறங்கலாம்.
LEO Success Meet LIVE: எது முடியாதோ அத முயற்சி செய்வதுதான் வெற்றி....இதுதான் தளபதியின் குட்டி ஸ்டோரி
இதுதான் தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி ‘ இரண்டு வேட்டைக்கார்கள் காட்டிற்கு செல்கிறார்கள். ஒரு வேட்டைக்காரர் வில் அம்பையும் இன்னொரு வேட்டைக்காரர் ஈட்டு எடுத்துக் கொண்டும் போகிறார்கள். வில் அம்பு எடுத்துச் செல்பவர் முயலை வேட்டையாடுகிறார். ஈட்டியை எடுத்துச் செல்பவர் யானை வேட்டையாட முயற்சி செய்து தோற்றுப் வெறுங்கையோடு திரும்புகிறார். இந்த இரண்டு நபர்களில் யார் வெற்றிபெற்றது என்று கேட்டால் யானையை வேட்டையாட முயற்சி செய்தவர் தான் வெற்றி பெற்றார். எப்போதும் நமக்கு எளிமையாக முடியும் ஒன்றை செய்வதைவிட நமக்கு கடினமான ஒன்றை முயற்சி செய்வதே வெற்றி” என்று தனது குட்டி ஸ்டோரியில் பெரிய கருத்தை பேசி இருக்கிறார் விஜய்
LEO Success Meet LIVE: மக்கள் தான் மன்னர்கள் நான் தளபதி...பிரச்சனையை சிம்பிளாக முடித்துவிட்டாரே விஜய்
” புரட்சித் தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். உலகநாயகன் ஒருத்தர் தான். மக்கள் தான் மன்னர்கள் நான் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்யுறேன் .” விஜய்
LEO Success Meet LIVE: இன்னும் ஹாலிவுட் மட்டும் தாம் மிச்சம்...லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் விஜய்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய விஜய் “ லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்த திரும்பி பார்க்க வெச்சாரு. கைதி படத்த திரும்பி திரும்பி பார்க்க வெச்சாரு...மாஸ்டர் விக்ரம் படத்த மொத்த இந்தியாவையும் பார்க்க வெச்சாரு. இப்பொ லியோல இன்னும் ஹாலிவுட் மட்டும் தான் மிச்சம் இருக்கு...” என்று விஜய் பேசியுள்ளார்
LEO Success Meet LIVE: ஸ்கூலுக்கு போற வழியில் வைன் ஷாப் இருக்கு... நடிகர் விஜய் அரசியல் பேச்சு ஆரம்பம்
” நான் ரெடிதான் பாடலில் விரலிடுக்கில தீப்பந்தம்னு எழுதிருக்காங்க அத பேனாவா நினைச்சுகலாம் ல..அதே மாதிரி பத்தாத்து பாட்டில்னு இருக்கு அத ஏன் சரக்குனு நினைக்கனும் கூலுனு நினைச்சுக்கலாம்ல...இப்படி எல்லாம் மழுப்பலா பேச நான் விரும்பல...ஸ்கூல் காலேஜ் போற வழியிலதான் வைன் ஷாப் இருக்கு எல்லாரும் ரெண்டு ரவுண்டு போட்டுட்டா பொறாங்க. சினிமாவ சினிமாவா மட்டும் பாருங்க” என்று காத்திரமாக பேசத் தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய்
LEO Success Meet LIVE: இந்த உடம்ப உங்க காலுக்கு செருப்பா தெச்சு போட்டா கூட.....வெற்றி விழாவில் நடிகர் விஜய்
லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் தற்போது பேசி வருகிறார். “ சினிமா டயலாக் பேசுறேனு நினைக்காதீங்க..இந்த உடம்பு தோல உங்க காலுக்கு செருப்பா தெச்சு போட்டா கூட பத்தாது “ என்று நடிகர் விஜய் பேசியுள்ளது ரசிகரகளை உணர்ச்சிவசப் படுத்தி இருக்கிறது.
LEO Success Meet LIVE: முத்தங்களை பிடித்துக்கொள்ளுங்க நண்பா நண்பி....
மேடையில் ஏறியவுடம் தனது ரசிகர்களுக்கு நாலா பக்கமும் முத்தங்களை பறக்கவிட்டிருக்கிறார் நடிகர் விஜய். அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கேட்ச் பிடித்துக் கொள்ளுங்கள்....
LEO Success Meet LIVE: நீங்கதான் உங்க இதயத்துல என்ன வெச்சிருக்கீங்க
”இவ்ளோ நாள் நான் தான் உங்கள என் நெஞ்சுல வெச்சிருக்கேன்னு நினைச்சேன். ஆனா நீங்கதான் என்ன உங்க இதயத்துல வெச்சிருக்கீங்க” ஒரு விஜய் ரசிகராக இந்த வார்த்தையை கேட்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துகொள்ள முடிகிறது மக்களே
LEO Success Meet LIVE: லியோ புதிய ட்ரெய்லர் ரிலீஸ்....எப்போ வெளியாகும்....
லியோ படத்தின் மேலும் ஒரு புதிய ட்ரெய்லரை நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது படக்குழு....முந்தைய ட்ரெய்லரை விட இந்த ட்ரெய்லர் மிரட்டலாக இருப்பதாகவும் விரைவில் இந்த ட்ரெய்லரை படக்குழு இணையதளத்தில் வெளியிடும் என தெரிய வந்துள்ளது
LEO Success Meet LIVE : ஹெலிகாப்டருக்கு பெயிண் அடிச்சுட்டு இருக்காங்க...லியோ 2 ?
லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜூக்கு என்ன பரிசு கிடைக்கும் என்கிற கேள்விக்கு “ ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடிச்சுட்டு இருக்காங்க....” என்று பதிலளித்துள்ளார் லோகேஷ். மேலும் லியோ இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று கேட்டபோது “ அவரு கண்ண காட்டுனா எடுத்திரலாம் “ என்று பதிலளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்
LEO Success Meet LIVE: வெற்றிமாறனை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும்....
இயக்குநர் வெற்றிமாறனை தன்னுடையப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று முறை அழைத்துள்ளதாகவும் அவரை தன்னுடையப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் லோக்கி
LEO Success Meet LIVE: மேடையில் உதவி இயக்குநர்களை கெளரவித்த லோகேஷ் கனகராஜ்....
மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ் “ நான் பெரிதாக எதுவும் தயார் செய்து வரவில்லை. எனக்கு இந்த இரண்டாவது வாய்ப்பளித்ததற்கு நன்றி விஜய் அன்னா. லவ் யூ. உங்களது அனுமதியுடன் என்னுடைய உதவி இயக்குநர்களை மேடையில் அழைக்க விரும்புகிறேன்.” லோகேஷ் கனகராஜின் 18 உதவி இயக்குநர்களை மேடையில் ஏற்றி அழகு பார்த்துள்ளார்.
LEO Success Meet LIVE: ஸ்கூல் நண்பனை பார்த்த அனுபவம்...லியோ வெற்றிவிழாவில் விஜய் பற்றி த்ரிஷா
லியோ படத்தின் கதாநாயகியான நடிகை த்ரிஷா பேசியபோது இப்படி கூறியுள்ளார் “ லோகேஷ் கனகராஜ் சத்யா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி நல்ல வேலையாக என்னை கொல்லவில்லை. விஜயுடன் நடிப்பது ஒரு பள்ளி நண்பனை மீண்டும் பார்ப்பது ஒரு அனுபவமாக இருந்தது. என்னுடைய 20 ஆண்டுகால திரைப் பயணத்தில் மிக நீண்ட பயணம் விஜயுடன் இருந்திருக்கிறது”.
LEO Success Meet LIVE: என்னடா இது அர்ஜூனுக்கு வந்த சோதனை....
மங்காத்தா படத்தில் நடிகர் அர்ஜுன் நடித்தபோதும் அவருக்கு த்ரிஷாவுடம் ஒரு காட்சியும் இல்லை. இப்போது லியோ படத்திலும் த்ரிஷாவுடன் அவருக்கு ஒரு காட்சியும் இல்லை. இதை ஒரு மனவருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அர்ஜூன். ஆக்ஷன் கிங் தான் அதற்காக ரொமான்ஸ் வராதுன்னு யாரு சொன்னா?....
LEO Success Meet LIVE: நாம காப்பாத்தலனா வேற யாரு காப்பாத்துவா...தயாரிப்பாளர் லலித் சொன்ன உண்மை
லியோ படத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் விஜய் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளார். “ கொரோனா காலத்தில் மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு ஒரு மிகப்பெரிய டீல் வந்தது. அப்போது நான் நடிகர் விஜயிடன் கேட்டேன். அதற்கு விஜய் “ நாம தியேட்டர காபாத்தலனா வேற யாரு காப்பாத்துவா. போய் வேலைய பாருங்க நான் கூட இருக்கேன் என்று விஜய் பதிலளித்துள்ளார்
LEO Success Meet LIVE: விஜயா இருக்கது கஷ்டமா இஷ்டமா...அர்ஜூனின் கேள்விக்கு விஜய் கொடுத்த பதில்
முதல்வன் பட ஸ்டைலில் நடிகர் அர்ஜுன் விஜயிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். ’விஜயாக இருப்பது கஷ்டமா இஷ்டமா ஈஸியா “ என்று அர்ஜூன் விஜயிடன் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த விஜய் “ வெளில இருந்து பாக்குறது கஷ்டமா இருக்கும் ஆனா உள்ள இருந்து ஈஸிதான் சர்..அதுக்கு பெரிய காரணம் இவங்கதான்” என்று ரசிகர்களை நோக்கி விஜய் கை காட்ட பரவசமைந்து கூச்சலிட்டுள்ளார்கள் ரசிகர்கள்
LEO Success Meet LIVE: நடிகர் திலகத்திற்கு பிறகு விஜய்தான்...ஆக்ஷன் கிங் அர்ஜூன்
லியோ படத்தில் ஹரோல்டு தாஸாக நடித்த நடிகர் அர்ஜூன் விஜயைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..” நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் விஜய் தான். விஜய் ரொம்ப ஷையான ஒரு மனிதர் ஆனால் இன்று இந்திய சினிமாவே அவரை வியந்து பார்க்கிறது . அவரது மிகப்பெரிய ஆயுதமே அவரது அமைதிதான்”
LEO Success Meet LIVE: கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பிருக்கிறதா....
கெளதம் மேனன் விஜயை வைத்து இயக்க இருந்த யோகன் படம் உருவாக வாய்ப்பிருக்கிறதா என்கிற கேள்வி எழுப்பினா திவ்யத்ர்ஷினி. யோகன் அத்தியாயம் ஒன்று என்று லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்
LEO Success Meet LIVE: நடிகர் விஜய்க்கு குட்டி முத்தம் கொடுத்த குட்டி பாப்பா இயல்
லியோ படத்தில் பார்த்திபனின் மகள் சிண்டுவாக நடித்த குழந்தை நட்சத்திரம் இயல் நடிகர் விஜய்க்கு குயூட்டான ஒரு முத்தம் கொடுக்க பதிலுக்கு விஜய் க்யூட்டான முத்தம் கொடுத்துள்ளார்.
LEO Success Meet LIVE: விஜய் சார ஒரு கிஸ் அடிக்கனும் -- சாண்டி மாஸ்டர்
லியோ படத்தில் சாக்லேட் காஃபி வசனத்தில் புகழ்பெற்ற சாண்டி மாஸ்டர் நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறியுள்ளார். நல்ல வேளை படத்தில் அவரை கொன்று விட்டார்கள்.....
LEO Success Meet LIVE: ஈனா மீனா டீகா...சிண்டுவை பார்த்து குஷியாகி நடிகர் விஜய்
லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த சிண்டுவை பார்த்து குஷியான நடிகர் விஜய் ஓடிச் சென்று அந்த குழந்தையை துக்கிக் கொண்டார். ஒரே க்யூட் மொமெண்ட்ஸ் தான்...
LEO Success Meet LIVE: புருஸ் லீயுடன் விஜயை ஒப்பிட்டு பேசிய இயக்குநர் மிஸ்கின்
நடிகர் விஜய் பற்றி பேசிய இயக்குநர் மிஸ்கின் , மைக்கேல் ஜாக்சன் மற்றும் புரூஸ் லீ ஆகிய இரண்டு ஜாம்பவான்களைப் பற்றி தான் கேள்விப்பட்டிருப்பதாகவும் தான் நேரில் பார்த்த ஒரு லெஜண்ட் நடிகர் விஜய் என்று அவரை புகழ்ந்துள்ளார்
LEO Success Meet LIVE: சந்தன கலர் சட்டையில் சாந்தமாக வந்த தளபதி...
லியோ வெற்றிவிழா நிகழ்ச்சியில் சந்தன கலர் சட்டை மற்றும் நீள நிற ஜீன்சின் வழக்கம் போல் ஊபர் கூலாக வந்துள்ளார் தளபதி விஜய். நாளை ஆன்லைனில் இந்த சட்டையில் விலையைத் தேடி அலையப் போகிறார்கள் ரசிகர்கள்
LEO Success Meet LIVE: சாக்லேட் காப்பியுடன் கேட்ட சாண்டி மாஸ்டரின் வைப்
லியோ படத்தின் சாக்லேட் காப்பி கேட்டு சைக்கோ வில்லனாக நடித்திருந்த சாண்டி மாஸ்டர் தற்போது வெற்றிவிழாவில் வைப் செய்துகொண்டிருக்கிறார். இங்கும் வந்து சாக்லெட் காப்பு கேட்டு அடம்பிடிக்காமல் இருந்தால் சரி
LEO Success Meet LIVE: அரங்கம் அதிரும்னு சொல்லுவாங்களே...அது இதுதான்
பொதுவாகவே அரங்கம் அதிரும் என்கிற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா... லியோ வெற்றி விழா நிகழ்ச்சியில் தற்போது அதுதான் நிலைமை.. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது 102 டெசிபள் ஒலியளவு குறிப்பிடப் பட்டுள்ளது. அனேகமாக நாளை சென்னையில் எல்லாரும் தொண்டை வழியோடுதான் இருப்பார்கள்.
LEO Success Meet LIVE: ரேம் வாக் செய்து அரங்கிற்குள் வருகைத் தந்துள்ளது சுப்ரமணி
லியோ படத்தில் சுப்ரமணியாக நடித்து ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான விலங்காக மாறி இருக்கிறது ஹைனா. எந்த அளவிற்கு சுப்ரமணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்றால் வெற்றிவிழாவில் சுப்ரமணி ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ரசிகர் இணையதளத்தில் பகிர்ந்துள்ள இந்த ட்வீட் அதற்கு சாட்சி
LEO Success Meet LIVE: பாசத்தில் கண் கலங்கிய மன்சூர் அலிகான்
லியோ படத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. லியோ வெற்றி விழாவிற்கு வருகைத் தந்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் ரசிகர்களின் பேரதரை பார்த்து கண்கலங்கி உள்ளார்
LEO Success Meet LIVE: நெப்போலியன் ரிப்போஸ்டிங் சார்...லியோ படத்தில் நெப்போலியனாக நடித்த மரியம் ஜார்ஜ் அதிரதி வருகை
கைதி படத்தில் நெப்போலியன் கதாபத்திரத்தில் நடித்த மரியம் ஜார்ஜ் லியோ படத்தில் வரும்போது திரையரங்கம் அதிர்ந்தது. தற்போது லியோ வெற்றிவிழாவில் அதே மாதிரியான அதிரடி எண்ட்ரி கொடுத்துள்ளார் நெப்போலியன் என்கிற மரியம் ஜார்ஜ்
LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. அரங்கம் அதிரும் ரசிகர்களின் கோஷம்...
நேரு உள்விளையாட்டரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் அரங்கம் முழுக்க குழுமியிருக்கும் ரசிகர்களின் கரவொலியால் விழா நடைபெறும் இடமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
LEO Success Meet LIVE:லியோ படத்தின் வெற்றி விழா.. முன்கூட்டியே வந்த விஜய்? ... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
லியோ படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்க நேரு உள்விளையாட்டரங்கிற்கு விஜய் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6 மணிக்கு விழா நடைபெற உள்ள நிலையில் 4 மணிக்கே விஜய் வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. அண்ணன் விஜய்யை பார்க்க களமிறங்கிய தங்க தம்பிகள்..!
லியோ படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்க வந்த ரசிகர்களுக்கு டேக் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பாஸ் மற்றும் இந்த ஸ்பெஷல் டேக் இருந்தால் மட்டுமே நேரு உள்விளையாட்டரங்கில் அனுமதி வழங்கப்படுகிறது.
LEO Success Meet LIVE: லியோ விழாவில் த்ரிஷாவை சிறப்பிக்கும் படக்குழு!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் - த்ரிஷா ஜோடி இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், லியோ விழாவில் த்ரிஷாவுக்கென தனி ட்ரிப்யூட் வீடியோ பகிர்ந்து அவரை சிறப்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்!
LEO Success Meet LIVE: லியோ வெற்றி விழாவுக்காக குவிந்த ரசிகர்கள்.. நேரு உள்விளையாட்டரங்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்
லியோ வெற்றி விழாவுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் குவிந்து வருவதால் நேரு உள்விளையாட்டரங்கம் அமைந்த்ள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
LEO Success Meet LIVE: நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார்!
லியோ வெற்றி விழா மாலை 6 மணிக்குத் தொடங்கும் நிலையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில், சென்னை துணை ஆணையர் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
LEO Success Meet LIVE : லியோ படத்தின் வெற்றி விழாவை பாதிக்குமா மழை?
வட கிழக்கு மழை தொடங்கிவிட்டால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் இன்று நடக்கவிருக்கும் லியோ வெற்றி விழா பாதிப்படைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால், பெரிய சிக்கல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
LEO Success Meet LIVE : அரசியலுக்கு காய் நகர்த்துவாரா விஜய்?
நடிகர் விஜய் வழக்கம்போல் குட்டிக்கதையை அடுக்குவார் என்றும், அந்த கதையில் தனது அரசியல் வருகை குறித்து சொல்லாமல் சொல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிலரிடம், விஜய் நேரடியாகவே அரசியல் வருகைக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது.
LEO Success Meet LIVE: விஜய் அண்ணனை நேரில் பார்க்க வேண்டும் - கேரளா ரசிகர்
"இரவில் கிளம்பினோம். சென்னைக்கு காலையில் வந்துதான் சேர்ந்தோம். டிக்கெட்டும் கிடைத்தது. விஜய் அண்ணனை நேரில் பார்க்க வேண்டும். அவரை ரொம்ப பிடிக்கும். அவர் நெஞ்சில் இருக்கிறார். ஆர்வமாக இருக்கிறோம்.” - கேரளா விஜய் ரசிகர்
LEO Success Meet LIVE : விஜய்யின் குட்டி கதைக்காக காத்திருக்கும் மக்கள்!
லியோவின் இசை வெளியீட்டு விழா நடந்து இருந்தால், வழக்கம் போல் விஜய் அங்கு குட்டி ஸ்டோரி சொல்லியிருப்பார். அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், விஜய்யின் குட்டி ஸ்டோரியை அனைவரும் மிஸ் செய்வதாக பதிவிட்டு இருந்தனர். இந்த குறையை போக்கும் வகையில், விஜய் இன்று சூப்பர் கதை சொல்லுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
LEO Success Meet LIVE: சாதனைகளை குவித்த லியோ திரைப்படம்!
நான் ரெடிதான் பாடல் வெளியான உடன் மில்லயன் கணக்கான பார்வைகளை பெற்று சாதனைப்படைத்தது. அதனை தொடர்ந்து வந்த முன்னோட்டமும் பல கோடி பார்வைகளை பெற்றது. அத்துடன் படம் வெளியான முதல் நாளிலே, 148.5 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.
LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ளும் கேரளா ரசிகர்கள்!
சென்னையில் நடக்கவிருக்கும் லியோ படத்தின் வெற்றி விழாவில் கேரளா ரசிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விஜய்யை நேரில் காண கேரளாவில் இருந்து அவரின் ரசிகர்கள் வந்து கொண்டுள்ளனர்.
LEO Success Meet LIVE : லியோ பட வெற்றி விழாவிற்கு செல்ல என்ன தேவை?
இன்று மாலை நடக்கவிருக்கும் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு செல்ல பாஸ், டேக் மற்றும் ஆதார் அட்டை தேவை என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் நேற்று தெரிவித்தார்.
LEO Success Meet LIVE : உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், பல விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர். அவர்களின் கவலையை போக்கும் விதமாக இன்று லியோ படத்தின் வெற்றி விழா நடைபெறவுள்ளது.