SSB Recruitment 2023: 60 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே

SSB Recruitment 2023: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிவ விவரங்களை காணலாம்.

Continues below advertisement

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘Sashastra Seema Bal’ என்ற அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ள விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டில் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

பணி விவரம்

வில் வித்தை, தடகளம், குத்துச்சண்டை, சைக்கிளிங்க், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆண், பெண் என இருவரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

மொத்த பணியிடங்கள் - 272

பணியிடம்

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் நியமிக்கப்படுவர்.

கல்வி மற்றும் பிற தகுதிகள்..

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும். தேசிய விளையாட்டு போட்டிகளில் ஜூனியர்/ சீனியர் பிரிவில் விளையாடியவர்கள், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 20.11.2023 -ம் படி 18 வயது நிரம்பியர்களாகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.21,700- ரூ.69,100/- வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை?
 
உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test, Physical Standard Test (PST)), எழுத்துத் தேர்வு, திறனறவுத் தேர்வு/ ட்ரேட் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பக் கட்டணம்:
 
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவ அலுவலார்கள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிப்பது எப்படி?
 
http://www.ssbrectt.gov.in/ - என்ற இணையதளத்தை க்ளிக் செய்து ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.11.2023 

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களை https://applyssb.com/SSBSports_2023/pdfs/Advertisement%20CTGD%20SQ%202023.pdf - என்ற லின்கை க்ளிக் செய்து காணலாம்.

 

சென்னை ஐ.ஐ.டி. வேலை

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர்

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

B.Tech/B.E./B.Sc/BCA படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி காலம்

இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

ஊதிய விவரம்

இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.11.2023


மேலும் வாசிக்க..

LEO Success Meet LIVE: இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் லியோ சக்சஸ் மீட்.. உடனுக்குடன் அப்டேட்கள் உங்களுக்காக!

Continues below advertisement
Sponsored Links by Taboola