நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளியில் உள்ள கிளை அலுவலகத்தில் வேலைவாய்ப்பிற்கு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


ஆலோசகர் (Financial Literacy Centre - Counsellor)


கல்வித் தகுதி:



  • விண்ணப்பதாரர்கள் வங்கி பணியில் இருந்து ஒய்வு பெற்றவராக இருக்க வேண்டும். 

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கியில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • இதற்கு விண்ணப்பிக்க திருச்சியில் வசிப்பவராகவும் பணி அனுபவம் இருப்பவராகவும் இருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

  • Branch Managers/ Agricultural officer ஆக பணிபுரிந்தவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


மாதம் ரூ.15,000/- அதோடு Other Allowance: Rs. 2500/- வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


தேர்வு செய்யப்படும் முறை:


ஆன்லைன் எழுத்துது தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான அழைப்பு குறித்த அறிவிப்பு விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ’The Chief Regional Manager' என்று குறிப்பிட்டு வங்கி அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


மேலும் விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/IOB-Advertisement-FLCC-Trichy-30052024.pdf - என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


வங்கி அலுவலக முகவரி


Indian Overseas Bank
Regional Office
PB No.10 , No -4 Bharathidasan Salai , 
Tiruchirappalli -620001
தொடர்பு எண்: 0431 – 2419355 & 0431 - 2418659


விண்ணப்பிக்க கடைசி தேதி, வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.iob.in/ - என்ற இணையதள முகவரியில் காணலாம். 




மேலும் வாசிக்க..


IAF Agniveer Recruitment: விமானப் படையில் வாய்ப்பு; ரூ.40 ஆயிரம் சம்பளம்- அக்னிவீர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?


Bharathidasan University: பயோடெக்னாலஜி முடித்தவரா? பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி செய்ய வாய்ப்பு - முழு விவரம்!