IAF Recruitment 2024: இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு இசைக்  கலைஞர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:


இசைக் கலைஞர்


List - A



  1. Concert Flute / Piccolo.

  2. Oboe.

  3.  Clarinet in Eb / Bb.

  4.  Saxophone in Eb / Bb. 

  5.  French Horn in F / Bb. 

  6. Trumpet in Eb / C / Bb.

  7.  Trombone in Bb / G.

  8. Baritone.

  9. Euphonium.

  10.  Bass / Tuba in Eb / Bb


List - B


 1. Keyboard / Organ / Piano.
 2. Guitar (Acoustic / Lead / Bass).
 3. Violin, Viola, String Bass.
 4. Percussion / Drums (Acoustic/ Electronic).
 5. All Indian Classical Instruments.


மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஏ, பி- இரண்டில் கொடுக்கப்பட்டுள்ள இசை கருவிகளில் ஏதாவது ஒன்றை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 10,12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில்  டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இந்துஸ்தானி அல்லது கர்நாடக க்ளாசிக் சங்கீதம் படிப்பில் தேர்ச்சி பெற்றிருகக் வேண்டும். 


அக்னிபாத் திட்டம் 


அக்னி பாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 


அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.


வயது வரம்பு:


02.01.2004 முதல் 02.07.2007 வரையிலான காலத்தில் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். தேர்வர்கள் 
https://agnipathvayu.cdac.in/AV/img/rally/AV_Musician_Rally_01_2025.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து, மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். 


ஊதிய விவரம்: 


இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.




அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி


4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  


இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in  -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தோ்வு ஜூலை 3 முதல் 12-ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தின் 7-ஆவது ஏா்மேன் தோ்வு மையம், நம்.1, கப்பன் ரோடு, பெங்களுரில் நடைபெறும். ( 3 ASC C/O AF Stn Kanpur / 7 ASC, No. 1 Cubbon Road, Bengaluru )


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு இசைக் கருவிகள் வாசிக்கும் தேர்வு, ஆங்கில மொழியில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு 1$2 அடாப்டப்ளிட்டி டெஸ்ட், உள்ளிட்டவைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ https://agnipathvayu.cdac.in/AV/- வலைத்தளத்திற்கு செல்லவும் 

  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்

  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யது ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/img/rally/AV_Musician_Rally_01_2025.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2024