இந்திய அஞ்சல் துறையில் 2022 ஆம் ஆண்டுக்கான GDS பதவிக்குரிய போட்டி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.


India Post GDS:


இந்திய அஞ்சல் துறையில் பதவிக்கான முடிவுகள் அஸ்ஸாம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளுக்கு வெளியாகியுள்ளன. இந்த 2 பகுதிகளில் தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவுகளைIndiaPost GDS Onlineஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளம்  மூலம்  தெரிந்து கொள்ளலாம்.






முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது:



  • Indiapostgdsonline.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று லாக் இன் செய்யவும்

  • Shortlisted candidate என்பதை கிளிக் செய்யவும்

  • அஸ்ஸாம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளை தேர்வு செய்யவும்

  • பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பில், தேர்வானவர்களின் விவரம் இருக்கும்






தேர்வானர்கள் கவனத்திற்கு.


தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும் போது அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் 30-ஆம் தேதிக்குள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி 1,490 பேர் தேர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1,138பேர் உத்தரகாண்டிலும், 352 பேர் அஸ்ஸாமிலும் எழுதியோர் தேர்வாகியுள்ளனர்.


மற்ற பகுதிகளுக்கு விரைவில்:


அஸ்ஸாம் மற்றும் உத்தரக்காண்ட் பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்வு எழுதியவர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.


Also Read: SSC JOBS: மத்திய அரசு வேலை ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்; 2,065 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கவும்


TN Gov Fellowship 2022: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் சூப்பர் சம்பளத்தில் பெல்லோஷிப்.. இன்றே கடைசி..உடனே விண்ணப்பிங்க..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண