எஸ்.எஸ்.சி:


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 2,065 காலிப்பணியிடங்கள் இருப்பதாக எஸ்.எஸ்.சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.


கல்வித்தகுதி:


10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள்  மற்றும் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பதவிக்கு ஏற்ற வகையில் கல்வித்தகுதி மாறுபடுகிறது.


விண்ணப்பம்:


விண்ணப்பிக்க ஜீன் 13ம் தேதி கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜீன் 15 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். Microsoft Word - SelectionPost_Ladakh_2022_06062022__Resubmitted_ _1_ (ssc.nic.in)


ஊதியம்:


பதிவிக்கு ஏற்ப ஊதியம் ₹19,900 முதல் ₹1,12,400 வரை வழங்கப்படுகிறது.


வயது வரம்பு:வயது வரம்பானது பணிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதனால் விண்ணப்பிக்க முன் விண்ணப்ப அறிக்கையை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.






தேர்வு செய்யப்படும் முறை:


முதலில் எழுத்து தேர்வு நடைபெறும்.இரண்டாவது எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும்.


எழுத்து தேர்வு பாடத்திட்டம்(syllabus):


மொத்தம் 100 கேள்விகளுக்கு எழுத்து தேர்வு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறான கேள்விகளுக்கு அரை மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


General intelligence - 50 marks


General awareness  - 50 marks


Aptitude                  - 50 marks


English language    - 50 mark


Total                        - 200 marks


விண்ணப்பிக்கும் முறை:


Home | Staff Selection Commission | GoI (ssc.nic.in)என்ற இணையதளத்திற்குச் சென்று விபரங்களை உள்ளீடு செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண