தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 


பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஆற்றலை தமிழக அரசின் முன்னோடி திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டத்தின் அடிப்படையில் கல்வி பெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இதில் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய முன்னோடி திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு தொடங்கி உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கான திறமைகளை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 


இந்த பணிகளுக்கு ஆர்வமும், திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில,மாவட்ட அளவிலான கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என இது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்க தகுதிகள்: 



  • சீனியல் பெல்லோஷிப் திட்டம், பெல்லோஷிப் திட்டம் என இருவகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

  • சீனியல் பெல்லோஷிப் திட்டத்தில் 38 பணியிடங்களும், பெல்லோஷிப் திட்டத்தில் 114 என மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளது. 

  • விண்ணப்பதாரர்கள் தமிழ், ஆங்கிலம் சரளமாக பேச,எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

  • சீனியல் பெல்லோஷிப்புக்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் 5 ஆண்டுகள் பணி அனுபவமும், பெல்லோஷிப் திட்டத்துக்கு இளங்கலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.  

  • முன் அனுபவமில்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிகாலத்தில் தேவைக்கேற்ப தாங்கள் பணிபுரியும் மாவட்டம் முழுவதும் பயணிக்க வேண்டும். 

  • பணிக்காலம் ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை ஆகும்.

  • பணிக்காலத்தில் தொடர் பயிற்சி வழங்கப்படும் நிலையில், இதனை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் பணி அனுபவ சான்றிதழ் வழங்கப்படும். 


ஊதியம்:


சீனியர் பெல்லோஷிப் பணிக்கு மாதம் ரூ. 45 ஆயிரமும், பெல்லோஷிப் பணிக்கு ரூ.32 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண