இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (indian oil corporation) நிறுவனத்தில் உள்ள காலியான உள்ள பிட்டர், பாய்லர், ஆப்ரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி நிலையில் உள்ள தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கான (Technical Apprentice) தேர்வு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
மொத்தம் 1535 பணியிடங்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.
பயிற்சி கால ஊதிய விவரம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி காலமான ஓராண்டுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2022 அக்டோபர், 10 மாலை 6 மணி வரை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06-11-2022
சான்றிதழ் சரிபார்ப்பு : 28-11-2022 - 07-12-2022
எழுத்துத் தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி காலம் :
தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்( மெக்கானிக்கல்) பணிக்கு 24 மாதங்கள்; அலுவலக உதவியாளர் (Secretarial Assistant), டேட்டா எண்ட்ரி ஆப்பிரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்) பணிக்கு 15 மாதங்கள்; இதர பணிகளுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரர் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி காலம் முழுவதற்கும் 32 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். காலாண்டிற்கு (அதாவது மூன்று மாதங்களில்) 8 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரஙகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/115.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க..