இந்தியா அஞ்சல் துறையின் மதுரை வட்டத்தில் காலியாக உள்ள M.V Mechanic, M.V Electrician, Painter, Welder and Carpenter பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணிவிவரம்:
மெக்கானிக் (Skilled) – 01
எலக்ட்ரிசியன் (Skilled) – 02
பெயிண்டர் (Painter (Skilled))– 01
வெல்டர் (Welder (Skilled)) – 01
தச்சர் (Carpenter (Skilled))– 02
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
M.V.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம்.
வயது வரம்பு:
01.07.2022 -இன் படி விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு லெவல்-2-இன் படி ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Level 2 in the pay matrix as per 7th CPC)
விண்ணப்பிப்பது எப்படி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். தகுதியானவர்கள் பயிற்சி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியானோர் தேர்வு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். மகளிர், பழங்குடிய/பட்டியலின பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவர்:
டிரேட் டெஸ்ட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, டிரேட் தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
The Manager,
Mail Motor Service,
CTO compound,
Tallakulam,
Madurai-625002
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.10.2022 மாலை 5 மணி வரை
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
அறிவிப்பின் முழுவிவரம் தெரிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஆல் தி பெஸ்ட்..
மேலும் வாசிக்க..
B.Ed : பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..! முழு விபரம் உள்ளே...!
12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிப்புகளில் சேராத 8,588 பேருக்கு வழிகாட்டுதல் - பள்ளிக்கல்வித்துறை