சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர், கணக்காளர், தகவல் பகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


மொத்த பணியிடஙகள் - 11


பணி மற்றும் ஊதியம் விவரம்:


பாதுகாப்பு அலுவலர்


 ரூ.27,804 ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.


கல்வித் தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் (சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல் / சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள முகமைத்துவம்)


இதனுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலன் போன்ற களத்தில் கருத்திட்டங்களை உருவாக்குதல்/ அமல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றில் 2 ஆண்டு பணி அனுபவமும்/ கணினி தேர்ச்சியும்  பெற்றிருக்க  வேண்டும்


வயது வரம்பு:


40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.


பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா):


இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,804  வழங்கப்பட  உள்ளது.


கல்வித் தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல் / சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள முகாமைத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.


 சமூக நலன் துறையில் திட்டங்களை உருவாக்குதல்,  கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகியவற்றில் இரண்டாண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 


கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்


வயது வரம்பு:


40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. 


 (Legal Cum Probation Officer):


இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,804  வழங்கப்பட  உள்ளது.


கல்வித் தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.


சமூக நலன் துறையில் திட்டங்களை உருவாக்குதல்,  கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகியவற்றில் இரண்டாண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 


கணினி பயன்படுத்த தெரிந்திருக்க இருக்க வேண்டும்


வயது வரம்பு: 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.


Counsellor:


 இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.


அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/உளவியல்/ பொது சுகாதாரம் ஆலோசனையில் பட்டதாரி (அல்லது)


முதுகலை டிப்ளமோ படிப்பில் சைகாலஜி துறையில் கவுன்சிலிங் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சமூகப்பணியாளர் (Social Worker); 


இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.


அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சமூகவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


கணக்காளர்(Accountant):


இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.


அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து  வணிகவியல்- கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


இந்தத் துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.


கணினியில் தேர்ச்சி மற்றும் Tally பற்றிய அறிவு இருக்க வேண்டியது அவசியம்.


வயது வரம்பு: 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.


தகவல் தொகுப்பாளர் (Data Analyst):


இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,538 ஊதியம் வழங்கப்பட உள்ளது.


அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து  B.C.A பட்டம் (புள்ளியியல்/கணிதம்/ பொருளாதாரம் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். .


பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


முகவரி:


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,


எண்.58, சூரிய நாராயணன் சாலை,
இராயபுரம், சென்னை-600 013.


விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான விண்ணப்பங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- 14.10.2022


https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tncpcr_160922.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ளலாம்.