ITR Refund Rules: 2022-23 நிதியாண்டுக்கான ITRஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரி தாக்கல்


நிதியாண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், மக்கள் தங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். 2022-23 நிதியாண்டுக்கான ITRஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


இதற்காக பொதுமக்கள் வசதிக்காக தற்போது வருமான வரி துறை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 2 படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதியை தொடங்கப்பட்டுள்ளது. ஐடிஆர் 1 மற்றும் 4 படிவங்களை மாத சம்பளம் வாக்குபவர்கள், மூத்த குடிமக்கள், தொழில் முனைவோர் வணிகர்கள் ஆகியோர் இந்த படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் 4 படிவத்தை ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தொழில் முனைவோர் தாக்கல் செய்ய வேண்டும்.


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முதலில் வரி செலுத்துவோர் தேவையான அனைத்து நிதி ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும். அதாவது சம்பளச் சீட்டு, வங்கி அறிக்கைகள் மற்றும் பிற வருமானம் மற்றும் செலவு தொடர்புடைய பதிவுகள் போன்றவற்றை எடுத்துவைத்து கொண்டு ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.


ஒரு வேலை நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது ஏதேனும் செலவுகள் அல்லது வரி விலக்குகளை தாக்கல் செய்ய மறந்திருந்தாலும், அதை பின்னர், வருமான வரி ரிட்டன் என்ற படிவத்தின் மூலம் சமர்ப்பித்து கூடுதலாக செலுத்திய வருமான வரியை, வருமான வரித்துறையிடம் இருந்து திரும்பப் பெறலாம்.


விதிமுறைகள்


ஒரு நபர் தான் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு அதிகப்படியான தொகையை செலுத்தியவர்கள் வருமான வரி ரீஃபண்ட் பெறுவதற்கு தகுதியானவர்கள். இதில் அவரின் அட்வான்ஸ் வரி, டிடிஎஸ், டிசிஎஸ் ஆகிய அனைத்தும் இருக்கும்.  நீங்கள் பணத்தை திரும்பப் பெறத் தகுதியுடையவராக இருந்தால், வருமான வரித்துறை ரீஃபண்ட் தொகையை குறிப்பிட்டு மின்னனு பரிமாற்றம் மூலம் பணத்தை திரும்பப் பெறலாம். கூடுதல் வரித்தொகை உங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்யும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். 



  • முதலில் வருமான வரி செலுத்துவதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login

  • அங்குள்ள இ-ஃபைலிங் இணையத்தில் பயனர் ஐடி, கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு உங்கள் வருமான வரி கணக்கிற்கு உள்நுழையவும்.

  • அதில் உங்கள் கணக்கிற்கு சென்று ரீஃபண்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

  • புதிய பக்கதில் உங்கள் வரி சார்ந்த அனைத்து விவரங்களும் காட்டப்படும். 

  • அதில் உங்கள் ரீபண்ட் தொகையின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பின்பு, அந்த தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு திரும்பப் பெறப்படும்.


குறிப்பாக கடந்த நிதியாண்டில் ரிட்டன் தாக்கல் செய்த முதல் 30 நாட்களில் ரீஃபண்ட் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 16 நாட்களுக்குள் வருமான வரித்துறையால் ரிட்டன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.