அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று (செப்.7) முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மாநிலம் முழுவதும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் 24,341 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு இன்று (செப்.7) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இளங்கலைப் படிப்பை முடித்த மாணவர்கள் https://tngasapg.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்டம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 21ஆம் தேதி முதல் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. 


மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலைக் காண: https://tngasapg.in/images/pdf-2022/college.pdf


விண்ணப்பிப்பது எப்படி?


Candidate Registration
விண்ணப்பதாரர் பதிவு


Application Form Filling
விண்ணப்பம் உள்ளீடு


Colleges and Courses Selection
கல்லூரிகள் & பாடப்பிரிவுகள் தேர்வு


Payment of Application Fee
விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்


Application Download and Print
விண்ணப்பம் பதிவிறக்கி, அச்சிடுதல்


முதுகலைப் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள, https://tngasapg.in/images/pdf-2022/instruction%20in%20tamil2022.pdf என்ற முகவரியை க்ளிக் செய்து, கையேட்டைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். 






முதுகலை படிப்புகளுக்கான விருப்ப வரிசை தயாரிப்பு தாளைப் பதிவிறக்கம் செய்ய: https://tngasapg.in/images/pdf-2022/PGChoice%20preparation%20Sheet%20-%20Tamil.pdf


கூடுதல் விவரங்களுக்கு: http://tngasapg.in


தொடர்பு எண்கள்: 044-2826009, 044-28271911.


முன்னதாக, 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் சேர 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், மாணவர் சேர்க்கை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் வாசிக்க: Puthumai Penn scheme: மாதாமாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்: எதற்கு, யாருக்கு, ஏன்? - ஓர் அலசல்


Model vs Thagaisal School: மாதிரிப் பள்ளிகள்- தகைசால் பள்ளிகள் என்ன சிறப்பம்சங்கள்? வித்தியாசங்கள்? - விரிவான பார்வை!