மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான  (GAIL (India) Limited) 'கெயில் இந்தியா'-வில்  உற்பத்தி, மார்க்கெட்டிங், விநியோகம் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம்  289 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


கெயில் நிறுவனம் 1988-ம் ஆண்டு விஜய்பூரில் எல்.பி.ஜி-யைப் பிரித்தெடுக்கும் உற்பத்தி மையமாக நிறுவப்பட்டது. எல்.பி.ஜி-யைப் பிரித்தெடுப்பதில் ஆண்டொன்றுக்கு நான்கு லட்சம் டன் என்ற நிர்மாணிக்கப்பட்ட அளவுடன் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


பணி மற்றும் வயது வரம்பு விவரங்கள் :


ஜூனியர் கெமிக்கல் இஞ்ஜினியர், மெக்கானிக்கல் இஞ்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  45-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


 Foreman (Electrical), (Instrumentation), (Mechanical) (Civil), உள்ளிட்ட பிரிவுகளுக்கு 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.


Junior Superintendent (Official Language),Junior Superintendent (HT) ஆகிய இரண்டு பணிகளுக்கும் 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


Junior Chemist , Technical Assistant (Laboratory), Operator (Chemical),  Technician (Electrical), Technician (Instrumentation), Technician (mechanical), Technician (Telecom and Telemetry), தீயணைப்பு துறை பணி, உதவியாளார், Accounts உதவியாளர், மார்க்கெட்டிங் துறை உதவியாளார் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 26 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். 



 


 கல்வித் தகுதி:


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.





 


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத்தேர்வு, திறனறிவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு பணிக்கும் ஏற்றவாறு எழுத்துத் தேர்வின் கேள்விகள் இருக்கும். தேர்வு துறைகள் சார்ந்து தனித்தனியே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




ஊதிய விவரம்:


இந்த பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஓராண்டுகாலம் ப்ரோபேசன் காலத்தில் இருப்பதாக கருதப்படுவர் என்றும் அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




 


 


விண்ணப்பிக்கும் முறை:


https://gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் உள்ள Careers பிரிவில் உள்ள அப்ளை என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவர் ஏதேவது ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியல்/ பழங்குடியினர் பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசிநாள் :15.9.2022


மேலும் விவரங்கள் அறிய https://gailonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


அறிவிப்பின் முழு விவரம் அறிய https://gailonline.com/careers/currentOpnning/DetailedAdvertisementENGLISH16082022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.