BHEL Recruitment 2023 :


 பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் 'பொறியாளர்’ மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (08.06.2023) கடைசி.


பணி விவரங்கள்:


பொறியாளர்


மேற்பார்வையாளர்


பணி இடம்:


இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில்  உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 


ஊதிய விவரம்:


இதற்கு தேர்வு செய்யப்படும் பொறியாளருக்கு ரூ.82,620, மேற்பார்வையாளருக்கு ரூ.46,130 மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க்க வேண்டும்.


பொறியியல் படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


சிவில் பொறியியல் தொடர்பான புராஜெட்களில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க  01.05.2023- அடிப்படையில்,34  வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பணி காலம்:


இது  ஒராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. 


விண்ணப்பிப்பது எப்படி?



  • அதிகாரப்பூர்வ இணையத முகவரி- https://pssr.bhel.com/SitePages/Main.aspx- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

  •  விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings-   கிளிக் செய்யவும், 

  •  ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.

  • அடுத்து“BHEL Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  • உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐ கிளிக் செய்யவும் அவ்வளவுதான்.

  • அதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பெல் நிறுவனத்திற்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி


Addl. General Manager (HR)
BHEL, Power Sector Southern Region,
BHEL Integrated Office Complex
TNEB Road, Pallikaranai, Chennai – 600 100


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.06..2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://careers.bhel.in/bhel/static/English%20Advertisement%20FTA%202023_PSSR.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


தொடர்புக்கு -  pssr.recruit@bhel.in




மேலும் வாசிக்க..


Maamannan : செட்டில் பல்ட்டி அடிச்சு சிரிப்பாங்க.. வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் குறித்து மாரி செல்வராஜ்


பணியாளர்களை கேவலமாக நடத்திய வங்கி அதிகாரி.. ஆன்லைன் மீட்டிங்கில் அத்துமீறல்.. நடந்தது என்ன?