HDFC வங்கி அதிகாரி மீது ஆன்லைன் தொந்தரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


கொல்கத்தாவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த 5ஆம் தேதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த அதிகாரி ஆன்லைன் மீட்டிங்கின் போது சக ஊழியர்களை மிக மோசமாக நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ ட்விட்டரில் பரவியது. அந்த அதிகாரி அனைவரிடமும் குரலை உயர்த்திப் பேசி கெடுபிடி செய்கிறார். இன்சூரன்ஸ், லோன் டார்கெட் எட்டவில்லை என்று சரமாரியாக கத்துகிறார். 


இந்நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைதளங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டோம். சம்பந்தப்பட்ட நபரை நாங்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளோம். வங்கி நடத்தை விதிமுறைகளுக்கு ஏற்ப அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி நிர்வாகம் இது போன்ற செயல்களில் ஜீரோ டாலரன்ஸ் பாலிஸி கொண்டுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.


அந்த வீடியோவில் மேலாளர் அவரது அவரது ஜூனியர் ஒரு நாளில் 75 இன்சூரன்ஸ் பாலிஸிகளை விற்க வேண்டும் என்று நிர்பந்தித்து கடுமையாக குரல் எழுப்பினார்.