வழக்கமாக நாம் படங்களில் நடிகர் ஃபஹத் பாசிலின் கண்களைதான் அதிகமாக ரசிப்போம். ஃபஹத் ஃபாசில் யாருடையக் கண்களை பார்த்து பிரமித்துப்போவார் என்று தெரியுமா.


மாரி செல்வராஜ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாமன்னன். வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் , உதயநிதி ஸ்டாலின், ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மாமன்னன் படம் ரிலிஸுக்குத் தயாராக உள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில் பல்வேறு சுவாரஸ்யமானத் தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.  நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு பற்றிய தகவல்கள் சிலவற்றை பேட்டி ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார் மாரி செல்வராஜ்.


ஃபஹத் ஃபாசில்


மாமன்னன் படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் பேசப்படக்கூடியதாக இருக்கும். அவரைப் பற்றி பேசும்போது மாரி செல்வராஜ் கூறியதாவது “தான் நடிக்கும் கதாபத்திரத்தை முற்றிலும் உள்வாங்கிக் கொள்வதில் உறுதியாக இருப்பவர் ஃபஹத் ஃபாசில். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் நடிக்கத் தொடங்குவதற்கு முன் அந்த காட்சிக்குப்பின் இருக்கும் வரலாறை  முழுவதுமாக கேட்டுத் தெரிந்துகொள்வார். மேலும் எந்த மாதிரியான ஒரு உணர்வு அந்த காட்சியில் இருக்கிறது என்பதை நன்கு கலந்தாலோசித்தப் பிறகு சிறிது நேரம் தனியாகச் என்று அந்த காட்சிக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வருவார்.” என கூறினார்.


லோகேஷ் கனகராஜ் ஃபஹத் ஃபாசில் குறித்து பேசும்போது இப்படிசொன்னார் “நாம் ஒரு கஷ்டமான சீனை மிக சிரத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் கொடுப்போம். இந்த காட்சியில் எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொல்வேன். ஆனால் ஃபஹத் அந்த காட்சியை தனது அனாயாசமாக தனது கண்களால் நடித்துவிடும் அளவிற்கு சிறந்த கலைஞர். இப்படிப்பட்ட ஃபஹத் மாமன்னன் படத்தில் அதிகம் ரசித்தது நடிகர் வடிவேலுவின் கண்களைதான் என்று மாரி செல்வராஜ் பகிர்ந்து கொண்டிருக்கிறார். வடிவேலுவின் கண்களைப் பார்த்து மாரி செல்வராஜையும் அழைத்து அதைப் பார்க்கச் சொல்வாராம் ஃபஹத்.


வடிவேலு


 மேலும் வடிவேலு குறித்து பேசும்போது “ நான் திரையில் பார்த்து சிரித்து ரசித்த மனிதர். அப்படி நான் எதை பார்த்து அவரை கொண்டாடினேனோ அதையே அவரை செய்யவிடாமல் வேறு ஒரு வகையில் அவரை நடிக்க வைத்திருக்கிறேன். படத்தில் அவருக்கு சீரியஸான கதாபாத்திரம் என்றாலு செட்டில் வடிவேலு அவரது இயல்பான நகைச்சுவை உணர்வால் அனைவரையும் சிரிக்க வைத்துகொண்டுதான் இருப்பார். வடிவேலு ஒரு கதையை சொல்லும்போது அதை சொல்லி மட்டும் காட்டாமல் நடித்தும் காட்டுவார். அவர் அடிக்கும் நகைச்சுவையைக் கேட்டு ஃபஹத் , கீர்த்தி சுரேஷ் இருவரும் பல்டி அடித்து சிரிப்பார்கள்.


விரைவில் மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்.