மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்

காலி பணியிடங்கள்:

பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)

மொத்த பணியிடங்கள் - 205 

கல்வித்தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்,சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் பல்கலைக்கழக மானியக் குழு அல்லது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட அலுவலர் பதவிக்கு MBA/PGHRM/MSW போன்ற முதுநிலை படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதோடு ஆறு ஆண்டுகள் JAVA,php, உள்ளிட்ட கம்யூட்டர் ப்ரோகிராமிங் சிறந்த அறிவு இருக்க வேண்டும். 

வயது வரம்பு:

பயிற்சி பொறியாளர் பதவி- 28 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்

மேலும் அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.

ஊக்கத்தொகை விவரம்:

இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு முதலாம் ஆண்டு மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.35 ஆயிரம் வழங்கப்படும். 

பயிற்சி காலத்திற்கு பிறகு... Project Engineer–II ஆக நியமிக்கப்படும்போது,  ரூ.45,000 -ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் -24-06.2023

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பம் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 24 ஆம் தேதி (24-06.2023)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் Pre https://jobapply.in/bel2023JUNBNG/ - என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் போது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம்  மற்றும் கையொப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

திட்ட பொறியாளர்/ அலுவலர் பதவிக்கு – ரூ. 472

பயிற்சி பொறியாளர்  பதவிக்கு – ரூ. 177

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

ஒப்பந்தப் பணி:

விண்ணப்பதாரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இப்பணிகளானது ஒப்பந்த பணியாகும். திட்ட பொறியாளர் பதவிக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்த பணிகளும், பயிற்சி பொறியாளர்  பதவிக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

இது தொடர்பான முழு விவரத்திற்கு  https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=WEB%20AD%20205%20ENGLISH-6-6-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


மேலும் வாசிக்க..

Maamannan Trailer: யுத்தத்தில் உதயநிதி; பார்வையில் மிரட்டும் வைகைபுயல்! வேட்டையாடும் ஃபகத்! வெளியானது மாமன்னன் ட்ரைலர்!

Vijay Political Entry: லியோ படத்தின் ‘நான் ரெடி’ பாடல்.. விஜய்யின் அரசியல் வருகைக்கான குறியீடா?