அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் (Neyveli lignite corporation) நிறுவனத்தில் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்திய அரசிற்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் தமிழ்நாட்டில் நெய்வேலியில் அமைந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், )  ஆண்டிற்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள்கள் இங்கு உற்பத்தியாகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations, மற்றும் Industrial Trainee (Mines & Mines
Support Services) ஆகிய பிரிவுகளில் ட்ரெய்னிங் அளிக்கப்பட உள்ளது. இதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என பார்க்கலாம்.


பயிற்சி திட்டம் விவரம்:


Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations - 238


 Industrial Trainee (Mines & Mines Support Services) -262


மொத்த பணியிடங்கள் - 500 


கல்வித் தகுதி:


பணியிடம்: 


இந்தப் பணிகளுக்கு நாடு முழுவதும் உள்ள என்.எல்.சி. நிறுவனங்களில் நியமிக்கப்படுவர்.


கல்வி தகுதி:


Specialised Mining Equipment பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


ஐ.டி.ஐ. முடித்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு:


இதற்கு பொதுப்பிரிவினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடி/ பட்டியலின பிரிவினர் 42 வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும். 


ஊக்கத்தொகை விவரம்:


1-Industrial Trainee [Specialised Mining Equipment (SME)Operations]
ரூ.18,000/- (முதலாம் ஆண்டு)
ரூ.20,000/- (இரண்டாம் ஆண்டு)
ரூ.22,000/- (மூன்றாம் ஆண்டு)


2- Industrial Trainee (Mines & Mines Support Services)
ரூ.14,000/- ((முதலாம் ஆண்டு)
ரூ.16,000/- (இரண்டாம் ஆண்டு)
ரூ.18,000/- (மூன்றாம் ஆண்டு)


பயிற்சி காலம்: 


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மூன்றாண்டு காலம் பயிற்சி வழங்கப்படும்


விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள்:


விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள்:



  1. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் (Hsc Mark sheet)

  2. கல்வி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)

  3. சாதி சான்றிதழ் (Community Certificate (in case of belonging to SC / ST / OBC / EWS).

  4. டிப்ளமோ, பட்ட படிப்பு தேர்ச்சி டிகிரி சான்றிதழ் (Degree Certificates / Diploma Certificate /Provisional Certificate)

  5. Consolidated mark sheet (or) Semester – wise Mark sheet

  6. மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ் (Proof for Physically with Disabled person (PwD) (if applicable))

  7. முன்னாள் இராணுவத்தினர் சான்றிதழ் (Proof for wards of Ex-Serviceman (if applicable))


உள்ளிட்ட சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். 


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிகளுக்கு www.nlcindia.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


எப்படி விண்ணப்பிப்பது:


https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் ’Careeers’ பிரிவில் விண்ணப்பிக்கலாம்.


https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf - என்ற இணைப்பை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.


விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 08.07.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/02-2023-pap.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.