தமிழ்நாடு முழுவதும் அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
கால்நடை மருத்துவ ஆலோசகர்
பணி இடம்:
கன்னியாகுமரி
கல்வி மற்றும் பிற தகுதிகள்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். இரண்டு/ நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது வரம்பு பற்றி அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஊதிய விவரம்:
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (அடிப்படை ஊதியம் - ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே-17 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
நேரடி தேர்வு நடைபெறும் இடம்:
The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd.,
K.P.Road,
Nagercoil – 629 003. , Tamil Nadu .
Email : aavinkk@gmail.com
Tel : 04652 - 230356
Fax: 04652-230785
இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாள்: 17.05.2023 / 11 மணி முதல்..
மேலும் வாசிக்க...