இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி. அதிகாரி பணிக்கான 227 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மே 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியக் கடற்படையில் Short Service Commission எனப்படும் எஸ்.எஸ்.சி. அதிகாரிகளுக்கான 227 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.


இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம். 


பணி விவரம்:




  • General Service - 50




  • கடற்படை ஆயுத ஆய்வாளர் பிரிவு (NAIC) -15 




  • போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (ATC) - 10




  • பைலட் - 25




  • லாஜிஸ்டிக்ஸ்- 30




  • கல்விப் பிரிவு- 12




  • பொறியியல் பிரிவு (GS) - 80



  • Air Tracffic -10 


கல்வித் தகுதி:


விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டதாரியாக இருக்க வேண்டும். தன்னுடைய இறுதி ஆண்டு படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கேற்ற சிஜிபிஏ மதிப்பெண்கள் இருக்க வேண்டும். 


பொறியியல் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற பட்டதாரிகளும் எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள்.


பைலட் பணிக்கு விமானம் ஓட்டுவதற்கான உரிமன் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


இந்தப் பணிகளுக்கு ரூ.56,100 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.


தேர்வு முறை


விண்ணப்பங்கள் தேர்வு 
எஸ்எஸ்பி தேர்வு
மருத்துவ உடல்தகுதித் தேர்வு
இறுதிக்கட்டப் பட்டியல்


எப்படி விண்ணப்பிப்பது?


* விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.joinindiannavy.gov.in/#-என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லுங்கள். 


* உங்களுக்கான கணக்கை (account) உருவாக்கி, அதில் உள்நுழையுங்கள். 


* விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கி, நிரப்பிக் கொள்ளுங்கள் 


* தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். சமீபத்திய புகைப்படமும் அவசியம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.joinindiannavy.gov.in/#-என்ற இணையதளத்தைக் காணவும்.


இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. 


இதற்கு இரண்டு ஆண்டுகால Probation காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் பணி திறன் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பட்டப்படிப்பின் மதிப்பெண் அடிப்படையில் அடுத்த தகுதித் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். (URL:-https://www.joinindiannavy.gov.in/files/normalisation.pdf). இது தொடர்பான விவரங்களை https://www.joinindiannavy.gov.in/files/normalisation.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


கவனிக்க:


 திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் கர்ப்பிணி பெண்கள் யாரும் இதற்கு  விண்ணப்பிக்க கூடாது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகளிலோ அல்லது பயிற்சியின் போது பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களின் பயிற்சி/தேர்வு உடனடியாக ரத்து  செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கு விண்ணப்பிப்பவர்கள் உடல் முழுவதும் டாட்டூ போட்டிருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2023


இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://drive.google.com/file/d/1Qy7pVXLUl1ijQiMtLu2RrMGS0uz-ft_b/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.




மேலும் வாசிக்க..


BJP Manifesto Karnataka: ’என்.ஆர்.சி, பொது சிவில் சட்டம் அமலாகும்..’ கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையால் பரபரப்பு.. முழு விவரம்


’8 மணிநேர வேலையை உறுதிப்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி’ - தொல்.திருமாவளவன் எம்.பி.,