உங்கள் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் என்று பட்டியலிட்டால், அவற்றில் முதலிடத்தைப் பிடிப்பது எந்த சத்தாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? புரதச்சத்து! புரதம் என்ற கிரேக்க மூல வார்த்தையின் பொருள், முதல் – முதலாவது. இந்த அர்த்தமே புரதம் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. உடல் தசையை உறுதிபடுத்த, முடி வளர, எதிர்ப்புத்திறன் உறுதிப்பட, உடலுக்கு அவசியமான சுரப்புகள் சுரக்க, மேலும் இன்னும் பல அத்தியாவசிய உடல் தேவைகளுக்கு புரதம் அவசியம். பிப்ரவரி 27 தேசிய புரத நாளாக நினைவுக்கூறப்படுகிறது, ஊட்டச்சத்து குறைபாடுகளில் புரதத்தின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.



ஒருநாளுக்கு எவ்வளவு புரதம் நமது உடலுக்குத் தேவைப்படுகிறது? ஆய்வு முடிவுகளின்படி, நமது உடலின் ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் அளவுக்கு புரதம் தேவை. அதாவது 90 கிலோ உடல் எடை உள்ளவர், ஒரு நாளுக்கு 72 கிராம்கள் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் 40 கிலோ எடை உள்ளவராக இருந்தால், நீங்கள் ஒரு நாளுக்கு 40 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஜிம் ஆர்வம், புரதம் எடுத்துகொள்வதின் அளவை மிகைப்படுத்தி வருகிறது, ஆனால் இந்த கணக்கை மனதில் வைத்துக்கொள்வது நல்லது. ஆயினும், நீங்கள் உங்கள் தசை அளவை மேம்படுத்தும் பயிற்சியில் இருப்பின் உங்களுக்கு புரதம் அதிகம் தேவைப்படலாம். உங்கள் உடற்பயிற்சி நிபுணருடன் கலந்தாலோசித்துவிட்டு உங்களுக்குத் தேவைப்படும் புரத அளவை உணவில் தினம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைபடி, நமது உணவு வேளைகளுக்கு இடையே புரத பேக் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், ஒரே நேரத்தில் முழு புரதத்தையும் எடுத்துக்கொள்வதை விட ஒரு நாள் முழுவதும் அதை விரித்து, சரியான நேர இடைவெளிகளில் அதை உட்கொள்வது நல்லது. 


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்