Health Benefits of Broccoli: ப்ரோக்கோலியை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உள்ளன, அதில் என்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்
ப்ரோக்கோலி காய்கறியானது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதர நன்மைகளை வழங்க கூடிய ஒரு காய்கறி வகையைச் சேர்ந்தது . இதை உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது உகந்ததாக பார்க்கப்படுகிறது.
எப்படி சாப்பிடுவது?
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அதிகம். இந்த பச்சை காய்கறியை பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கையில், மிதமாக வேகவைத்து உண்பது மிகவும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது.
image crdits:@ pixabay
ஊட்டச்சத்துக்கள்:
ப்ரோக்கோலியில் கிட்டத்தட்ட 90% நீர், 7% கார்ப்ஸ், 3% புரதம் மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை என உணவு சம்பந்தமான உடல்நலம் குறித்து தகவல்களை தெரிவிக்கும் ஹெல்த்லைன் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கப் (90 கிராம்) ப்ரோக்கோலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கலோரிகள்: 35
புரதம்: 2.3 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்: 5.6 கிராம்
நார்ச்சத்து: 2.2 கிராம்
கொழுப்பு: 0.3 கிராம்
வைட்டமின் சி: தினசரி அளவில் 91%
வைட்டமின் கே: தினசரி அளவில் 77%
ஃபோலேட்: 15%
ப்ரோக்கோலியில் ஒரு சிறிய அளவு பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் உள்ளது.
நன்மைகள்:
ப்ரோக்கோலியை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவ ரீதியிலான தகவலை தரும் மெடிக்கல் நியூஸ் டுடே பட்டியலிட்டுள்ளது.
1. நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
2. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
3. செரிமானத்திற்கு உதவும்
4. நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்
5. இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
6. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ப்ரோக்கோலியில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது, ஆனால் போதுமான அளவு நார்ச்சத்து வழங்குகிறது, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது எனவும் ஹெல்த்லைன் வலைதள பக்கம் தெரிவித்துள்ளது.
Also Read: Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!
Also Read:Wheat Aappam: சாப்பாட்டு பிரியர்களே! மிருதுவான கோதுமை ஆப்பம்.. இப்படி செய்து அசத்துங்க!