ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களை தாமதப்படுத்தும் பழக்கத்தை பயிற்சி செய்யும்போது மிக விரைவில் இந்தப் இந்த பழக்கத்தில் இருந்து வெளி வருவீர்கள்.
நீங்கள் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டுமா?
நம்மில் பலர் குடிப்பதற்கு முக்கிய காரணமாக கூறுவது மன அழுத்தம் கவலை மற்றும் தூக்கமின்மை. அவர்கள் சொல்லுவது, என்னால் குடிக்காமல் இருக்க முடியாது, குடித்தால் மட்டுமே என் கவலை குறையும் மற்றும் தூக்கம் வரும். நீங்கள் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டுமா? இந்த செயலை செய்யுங்கள் விரைவில் வெளி வருவீர்கள், 4D, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
உங்கள் ஏக்கம் காணாமல் போய்விடும்
Delay (தாமதம்) தாமதப்படுத்துவது என்றால் என்ன? இது மிக முக்கியமான ஒரு உத்தி. மது அருந்த வேண்டும் என்ற ஏக்கம் வரும்போது அதை தள்ளிப்போட வேண்டும். பத்திலிருந்து இருபது நிமிடம் வரை தள்ளி போட முயற்சி செய்யுங்கள் உங்கள் ஏக்கம் காணாமல் போய்விடும், உங்கள் ஆசையும் அடங்கிவிடும். அது எப்படி சாத்தியம் என்று உங்கள் மனதுக்குள் ஒரு கேள்வி தோன்றலாம் உங்கள் புரிதலுக்காக நம் அன்றாட வாழ்க்கையில் நடக்க கூடிய ஒரு விஷயத்தை உதாரணமாக கூற விரும்புகிறேன். ஒருவர் மதிய உணவு ஒரு மணிக்கு சாப்பிடக்கூடிய பழக்கம் உள்ளவர் என்று வைத்துக்கொள்வோம், ஒருவேளை அந்த குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடியாமல் போனால் பசி அதிகரித்துக்கொண்டே செல்லும், ஆனால் நேரம் செல்ல செல்ல பசி தானாக அடங்கிவிடும். அதே போல் தான் இங்கும் அது சாத்தியம் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களை தாமதப்படுத்தும் பழக்கத்தை பயிற்சி செய்யும்போது மிக விரைவில் இந்தப் இந்த பழக்கத்தில் இருந்து வெளி வருவீர்கள்.
மூச்சுப்பயிற்சி அவசியம்
Deep Breaths (ஆழமான சுவாசம்) மூச்சுப்பயிற்சி ஒருவர் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவருவதற்கு அதிகமாக உதவுகிறது. மூச்சை ஆழமாக உள்ளிழுக்கவும், இரண்டு விநாடிகள் வைத்திருங்கள், பின்னர் மெதுவாக விடுங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்வதன் மூலம் தளர்வு நிலைக்கு செல்கிறீர்கள். அதேநேரம் உங்கள் குடிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை சிதறடிக்கச் செய்கிறீர்கள். ஆழ்ந்த சுவாசம் உங்களை அமைதியாக வைத்திருக்க உதவும், மோசமான முடிவுகளை எடுப்பதைத் தடுக்கும். Drink lots of water (நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்)
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும், குறிப்பாக குடிக்க வேண்டும் என்ற ஏக்கம் வரும்போது தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது, இது, உடம்பில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.. தண்ணீரை வேகமாக குடிக்க வேண்டாம். மெதுவாக உறிஞ்சி குடிக்க வேண்டும் சிறிது சிறிது சிறிதாக இடைவெளி விட்டு தண்ணீரை பருக வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய குடிக்க வேண்டும் என்ற ஆவல் குறையும். நீங்கள் வெளியே இருக்கும்போது ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள், உங்கள் அலுவலக மேசையில் ஒரு குவளையில் தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்
Distract ( கவனத்தை திசை திருப்புங்கள்)
குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது, உங்கள் எண்ணத்தை திசை திருப்புங்கள். தொடர்ச்சியாக இவ்வாறு செய்வதன்மூலம், வெகு விரைவில் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும். எவ்வாறு உங்கள் எண்ணத்தை திசை திருப்பலாம். உதாரணமாக, நல்ல பாடல்களை கேளுங்கள், நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம் பேசுங்கள், நல்ல புத்தகங்களை வாசியுங்கள், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள், நண்பர்களுடன் பேசி மகிழுங்கள், கோயிலுக்கு செல்லலாம், வீட்டில் உள்ள வேலைகளை செய்யலாம் மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். இவ்வாறு பல நல்ல விஷயங்களில் உங்கள் கொண்டு சேர்த்தார் உங்கள் வாழ்வும் வளமுடன் மாறும்.” - மனநல ஆலோசகர் ப.ராஜ சௌந்தர பாண்டியன்.