ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டும்.எளிதாக சமைக்க கூடியதாக இருக்கணும் என்று நினைப்பவர்கள் காய்கறி, இறைச்சி வைத்து ஒரு பானை ரைஸ் செய்து சாப்பிடலாம். 


சமையலுக்கு அதிகம் நேரம் ஒதுக்காமல் ஏதாவது செய்து சாப்பிடலாம் என்று நினைத்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். பனீர், ப்ரோக்கோலி ரைஸ் சுவையான இருக்கும். எப்படி செய்வது என காணலாம். 


பனீர் ப்ரோக்கோலி ரைஸ்


என்னென்ன தேவை?


பனீர் - 250 கிராம்


ப்ரோக்கோலி - 250 கிராம்


வெங்காய தாள் - சிறிதளவு


வெங்காயம் - 1


சில்லி ஆயில் - தேவையான அளவு


பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


Soy Sauce - ஒரு டீ ஸ்பூன்


வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


பனீர் ப்ரோக்கோலி ரைஸ் செய்முறை:



  • முதலில் பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

  • . ஒரு கடாய் அல்லது பிரியாணி செய்யும் பாத்திரத்தில் கூட செய்யலாம். 

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றாமல் சிறிதளவு நறுக்கிய காளான்களை நன்றாக ப்ரவுன் நிறம் வரும்வரை வதக்கி எடுக்கவும்.

  • அடுத்து, அதே பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு நறுக்கிய  ப்ரோக்கோலி சேர்த்து 5 நிமிடங்கள் வரை

  •  ப்ரோக்கோலி நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் அளவு அரிசியை அதோடு சேர்த்து வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கலக்கவும். 

  • தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடிபோட்டு அரிசி வேகும் வரை காத்திருக்கவும்,. தண்ணீர் அளவோடு வைப்பது நல்லது. 15 நிமிடங்கள் கழித்து ரைஸ் தயாராகியிருக்கும். இதில் காரம் தேவையான அளவு சில்லி ஆயில், வறுத்த பனீர் சேர்த்து கலக்க வேண்டும். பனீர் ப்ரோக்கோலி ரைஸ் ரெடி.


சில்லி ஆயில் செய்முறை:


சில்லி ஆயில் மேஜி, பாஸ்தா, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்டவற்றில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இது தரும் ஃப்ளேவர் உணவிற்கு தனிச்சுவை தரும்.  வீட்டிலேயே சில்லி ஆயில் செய்யலாம். சில்லி ஃப்ளேக்ஸ்,எண்ணெய் மட்டும் போதும்.  ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் இதில் சிறிதளவு பட்டை, ஸ்டார் அனீஸ், இஞ்சி, கிராம் எல்லாம் சேர்த்து, சிறிய அளவிலான வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.


அது நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். இப்போது எண்ணெய் சூட்டோடு இருக்கும்போதே அதில் 5 டேபிள் ஸ்பூன் அளவு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்தால் ‘சில்லி ஆயில்’ ரெடி. கூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கலாம். தேவையானபோது பயன்படுத்தலாம். 




மேலும் வாசிக்க..


Dal Recipe:சப்பாத்திக்கு சூப்பர் காம்போ- பருப்பு மசியல் செய்முறை இதோ!


Green Peas Rice : பிரியாணியை மிஞ்சும் சுவையில் பச்சை பட்டாணி சாதம்.. செய்முறை இதோ..