மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் அவர்களின் வயிறுக்கும் ஆழ்ந்த தொடர்பு உண்டு. நாம் எந்த வகையான உணவை உண்கிறோம், எப்போது உண்கிறோம், எத்தனை மணி நேரங்களுக்கு ஒரு முறை உண்கிறோம், நமது மலக் கழிவு எப்படி இருக்கிறது, ஒரு நாளைக்கு எத்தனை தடவை நாம் கழிவறையைப் பயன்படுத்துகிறோம் இவற்றின் மூலம் நமது ஆரோக்கியத்தை எளிதாகக் கணக்கிடலாம். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஆய்வு அதை உறுதி செய்கிறது.


நீங்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் நண்பர் ஏன் பல முறை கழிவறைக்கு சென்று திரும்புகிறார்? மற்றொரு நண்பர் ஏன் கழிவறைக்கே செல்ல மாட்டேனென்கிறார்? நம்மில் சிலர் தினம் மலம் கழிக்கிறோம். சிலரோ ஒரு நாள் விட்டு ஒருநாள், சிலர் வாரத்தில் சில முறை மட்டுமே, சிலர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள். எதனால் இந்த வித்தியாசங்கள்?


சமீபத்திய ஆய்வு இதற்கும் நமது பெற்றோர் நமக்குத் தந்துவிட்டுச் சென்ற மரபணுவிற்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவலை எடுத்துரைக்கிறது. நமது சீரணப் பிரச்சனைகளுக்குப் பின்னணியில் நமது பெற்றோர் காரணமாக இருக்கலாம்.



உலகில் பலரின் நிம்மதியைக் கெடுக்கும் ஒரு பிரச்சனை எரிச்சலூட்டும் குடல் நோய் (Irritable Bowel Syndrome – IBS) பெரும்பாலானோருக்கு இது மன உளைச்சலாலும் மனப் பதற்றத்தாலும் ஏற்படுவதாகக் கருதப்பட்டு வந்தது. இப்போது மரபணுக்களும் இதற்குக் காரணமாக இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. ஐபிஎஸ் உண்மையில் மனதளவில் சோர்வை ஏற்படுத்தும் பிரச்சனை தான். இதனுடைய வெளிப்படையான அறிகுறிகளில் ஒன்று, உண்டவுடன் மலம் கழிக்கும் தேவை உருவாவது. அதானால், எதை உண்டாலும் உடனடியாக கழிவறைக்கு ஒதுங்குவது அவசியமாகிறது. உணவு முறையில் சில மாற்றங்கள் செய்யும்போது இந்த பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர்.


பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்காவின் சில பகுதிகளில் 1,67,875 மக்களிடம் அவர்களின் கழிவறைப் பயன்பாடு குறித்து தகவல்கள் திரட்டியதில் இந்த ஆய்வு தொடங்கியது. இதன் மூலம் எத்தனை முறை மலம் கழிக்கிறோம் என்பது நமது மரபணுவில் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.  


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்