"இராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் அடுத்த நீர்கோழியேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்பவரின் மரணத்தை குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. டிசம்பர் 4, 2021 மாலை  மணிகண்டன் மற்றும் சஞ்சய் காவலர்களை பார்த்ததும் நிற்காமல் சென்றாதலும், தப்பித்து சென்ற சஞ்சய் பெயரில் கொலை முயற்சி வழக்கு இருந்ததாலும், விளக்கம் கேட்க காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். 


அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பதால், அவருக்கு தக்க அறிவுரை கூறி அவருடைய பெற்றோரை வர வைத்து மறுநாள் காலை விசாரணைக்கு ஆஜராகும்படி, ஆஜர் மூச்சலிக்கா எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர். இது காவல் துறையில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்முறை. விசாரணை குறித்தான  முழுமையான CCTV காட்சிகள் மற்றும் அவரது உரையாடல்கள் எல்லாம் தெளிவாக உள்ளன.




சென்னையில் TN 05 CD 2641 என்கிற NS 200 இரு சக்கர வாகனத்தை இவருடைய உறவினர் ஹரிஹரன் என்பவர் வைத்திருந்துள்ளார். இந்த வண்டியின் எண்ணை மணிகண்டன் தன்னுடைய வண்டியில் போட்டு பயன்படுத்துகிறார். முதலில் சிவப்பு நிறத்தில் இருந்த அந்த வண்டியை வெள்ளை நிறமாக மாற்றி போலியான எண்ணில் ஓட்டி வருகிறார். இது அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.


மணிகண்டன் ஓட்டி வந்த இரு சக்கரவாகனத்தின் இன்ஜின் நம்பரை தணிக்கை செய்ததில் மதுரை மாவட்டம் மேலூரில் 20.08.2021 அன்று திருடப்பட்டதாக வண்டி உரிமையாளர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. மணிகண்டனின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து வர சொல்லும்போது, அவரது தாயார் தன்னிடம் வாகனம் எதுவும் இல்லை என்று கூறியதால், ஒரு ஆட்டோ பிடித்து வருமாறு காவலர் கூறியதை, அடித்ததால் தான் ஆட்டோ பிடித்து வருமாறு கூறியதாக தவறான செய்தி பரப்புகின்றனர்.




அவர் காவல் நிலையத்தில் இயல்பாக நடப்பதையும், பேசுவதையும் நாம் CCTV பதிவுகளில் காணலாம். அவரை துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் எதுவும்  இல்லை. அவரது உடற்கூறாய்விற்கு பிறகு எடுத்த படங்களை போட்டு தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் அவரது உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறிய நபர்கள் முழுமையாக சோதனை செய்துள்ளனர்.  மருத்துவர் குழுவும் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.


இது குறித்த முழுமையான CCTV பதிவுகள், போலி வாகன ஆவணங்கள், வாகன உரிமையாளரின் வாக்குமூலங்கள் ஆகியவை அனைத்து தரப்பு முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வீடியோ ஆதாரம்  காண்பிக்கப்பட்டது. எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, அனைத்து செயல்பாடுகளிலும் காவல்துறை வெளிப்படை தன்மையை உறுதி செய்து வருகிறது.   


தங்களின் குடும்பத்தை கூட கவனிக்காமல், இரவு பகல் பாராது உண்மையாக உழைத்து வரும் காவல் துறையின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வண்ணம் சிலர் செயல்பட்டு இந்த விஷயத்தை திசை திருப்பி வருகின்றனர். இந்த விஷயத்தை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் ஒரு சில யூகங்களின்  அடிப்படையில் பேசுவது சரியன்று. இந்த மரணத்தை குறித்து முழுமையான நீதி விசாரணை நடந்து வருவதை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.