உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். நகரத்தின் தனிமை, அது கொடுக்கும் மனச் சிதைவு, சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது போன்றவற்றிலிருந்து விடுபட உடற்பயிற்சி ஒரு நல்ல வழியாக இருக்கக் கூடும். தினம் காலையில் ஒரு வழக்கம் இருப்பது கிட்டத்தட்ட தியானத்தில் ஈடுபடுவது போன்ற விளைவை உண்டு பண்ணும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் தினம் காலையில் நமது கொழுப்பைக் கரைத்து விடக்கூடிய ஒரு பானத்தை வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம். அதுவும் சமையலைறையில் கிடைக்கும் எளிய பொருட்களை வைத்தே அந்த பானத்தைத் தயாரிக்கலாம்.
எலுமிச்சை பிடிக்காதவர்கள் மிகக் குறைவே. நாக்கை இழுக்கும் புளிப்புச் சுவையுடன் புத்துணர்ச்சி ஊட்டும் எலுமிச்சை மேலும் பல நற்சத்துகளை உள்ளடக்கி இருக்கிறது. எழுமிச்சையிடம் விட்டமின் சி மிக அதிகமாக இருக்கிறது. உடலில் சுறுசுறுவென்று உற்சாகத்தை உண்டு பண்ண, சோர்வை ஒதுக்கித் தள்ள இது காரணமாக இருக்கிறது. வெல்லத்துடன் உட்கொள்ளப்படும்போது உடலில் இருக்கும் நச்சு சத்துகளைக் கரைத்துவிடும் திறனும் இதற்கு இருக்கிறது. மேலும், தோலை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது, உடலில் நீர்ச் சத்தை உறுதிப்படுத்துவது, சீரணத்திற்கு உதவுவது, பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பது, இதய ஆரோக்கியத்தை உறுதி செய்வது போன்ற பல நற்பயன்களைக் கொண்டுள்ளது.
வெல்லம் சீரணத்திற்கு உதவுகிறது, உடலை சுத்தப்படுத்துகிறது, நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. ஆதலால் இரண்டையும் சேர்த்துப் பருகும்போது அது இத்தனை நற்பயன்களை மட்டும் தரவல்லாமல் மேலும் எடை இழப்பையும் உறுதி செய்கிறது.
இந்த பானத்தை எப்படித் தயாரிப்பது?
- சிறிது வெல்லத்தை எடுத்து தண்ணீருடன் கொதிக்க செய்ய வேண்டும்.
- அதை வடிகட்டி, சிறு எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.
- நன்றாக கலக்கி பருக வேண்டும்.
தினம் காலை இதை செய்வது நல்லது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்