கோவேவேக்ஸ் குறித்து இந்திய அரசு சீரம் நிறுவனத்திடம் கூடுதல் தகவல் கேட்டுள்ளது


கோவிட் தடுப்பு மருந்து கோவோவேக்ஸ் அவசர சூழ்நிலையில் பயன்படுத்தப்பட மார்க்கெட் அனுமதி வேண்டும் என சீரம் நிறுவனம் எழுப்பிய விண்ணப்பத்திற்கு இந்திய அரசின் மருந்து கட்டுப்பாடு அமைப்பு (DCGI) அதனிடம் கூடுதல் ஆய்வறிக்கைகள் கேட்டு பதில் அனுப்பியிருக்கிறது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம், கோவோவேக்ஸ், அது கண்டுபிடிக்கப்பட்ட நாட்டில் இன்னும் மார்கெட் அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான்.


கடந்த அக்டோபரில் புனேவில் இருக்கும் சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பு மருந்திற்கு கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டு அனுமதி வேண்டி DCGI-க்கு கோரிக்கை எழுப்பியிருக்கிறது. இதனுடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட தடுப்பு மருந்திற்கான சோதனை ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்திருக்கிறது.


கடந்த நவம்பர் 24-இல் விண்ணப்பத்திற்கு பதிலளித்த DCGI கோவோவேக்ஸ் அது கண்டுபிடிக்கப்பட்ட நாட்டில் மார்கெட் அங்கீகாரம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மேற்கொண்டு தகவல்கள், ஆய்வறிக்கைகள் வேண்டும் என கேள்வி எழுப்பியிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளின் முழு அறிக்கையும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட சோதனை முடிவையும் சார்ந்த ஆய்வுகள், முறையே அதன் அறிக்கைகளும் வேண்டும் என கேட்டிருக்கிறது.


சமீபத்தில், இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு கோடி கோவோவேக்ஸ் தடுப்பு மருந்துகள் இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்